»   »  அவதாரைத் தொட்டுவிடும் தூரத்தில் ஸ்டார் வார்ஸ்... வசூலில் புதிய சாதனை படைக்குமா?

அவதாரைத் தொட்டுவிடும் தூரத்தில் ஸ்டார் வார்ஸ்... வசூலில் புதிய சாதனை படைக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: வெளியாகி 3 வாரங்கள் முடிவுற்ற நிலையில் இதுவரை 1.5 பில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேகக்ன்ஸ்.

இதனால் உலகளவில் அதிக வசூல் சாதனை நிகழ்த்தி முதலிடத்தில் இருக்கும் அவதார் படத்தின் வசூல் சாதனையை ஸ்டார் வார்ஸ் முறியடிக்குமா? என்ற கேள்வி அனைவரின் மனத்திலும் எழுந்துள்ளது.

நாளுக்குநாள் பாக்ஸ் ஆபிஸின் வரலாறுகளை உடைத்து வசூலில் முன்னேறிக் கொண்டே வருகிறது ஸ்டார் வார்ஸ்.

ஸ்டார் வார்ஸ்

ஸ்டார் வார்ஸ்

கடந்த 14 ம் வெளியான ஸ்டார் வார்ஸ் இந்தியாவில் கடந்த 25 ம் தேதி வெளியானது. முதல் 6 பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் 7 வது பாகமாக வெளியான இந்தப் படத்திற்கு உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் படம் வெளியாவதற்கு முன்பான டிக்கெட் விற்பனையிலும் புதிய சாதனை படைத்தது ஸ்டார் வார்ஸ்.

ஜே.ஜே.ஆப்ராம்ஸ்

ஜே.ஜே.ஆப்ராம்ஸ்

ஹாலிவுட்டின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஜே.ஜே.ஆப்ராம்ஸ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் ஹாரிசன் போர்ட், மார்க் ஹமில், கேரி பிஷெர், ஆடம் டிரைவர், டெய்சி ரிட்லி உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர்.

12 நாட்களில் 1 பில்லியன்

12 நாட்களில் 1 பில்லியன்

படம் வெளியான முதல் 12 நாட்களில் 1 பில்லியன் டாலர்களை வசூலித்து புதிய உலக சாதனை படைத்தது ஸ்டார் வார்ஸ்.இதற்கு முன்னர் ஜுராசிக் பார்க் திரைப்படம் 13 நாட்களில் இந்த சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

அவதார்

அவதார்

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படம் இதுவரை உலகளவில் அதிக வசூல் சாதனை செய்த படங்களில் முதலிடத்தில் இருக்கிறது. சுமார் 2.6 பில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தைக் கைப்பற்றி இருக்கும் அவதாரின் வசூலை இதுவரை எந்தப் படமும் முறியடிக்கவில்லை.

ஸ்டார் வார்ஸ் vs அவதார்

ஸ்டார் வார்ஸ் vs அவதார்

ஆனால் இன்னும் ஒருசில நாடுகளில் வெளியாகாமல் இருக்கும் ஸ்டார் வார்ஸ் 7, அவதாரின் வசூலை கண்டிப்பாக முறியடித்து விடும் என்று விமர்சகர்கள் ஆரூடம் கூறி வருகின்றனர். வெளியான 3 வாரங்களிலேயே ஸ்டார் வார்ஸ் 1.5 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதால் இது சாத்தியமே என்ற ரீதியிலான பேச்சுகளும் எழுந்துள்ளன.

அவதார் 2

அவதார் 2

ஒருவேளை ஸ்டார் வார்ஸ் அவதாரின் வசூல் சாதனையை முறியடித்தாலும் அடுத்து வரப்போகும் அவதார் 2 இழந்த சாதனையை மீட்டு எடுத்து விடும். ஆனால் ஸ்டார் வார்ஸின் அடுத்த பாகம் வரத் தாமதமாகும் என்பதால் இன்னும் சில வருடங்களுக்கு இந்த பாக்ஸ் ஆபிஸ் மோதல்கள் இருக்காது எனினும் ஸ்டார் வார்ஸ் இந்த சாதனையை முதலில் படைக்கிறதா? என்று பார்க்கலாம்.

English summary
Avatar is the Highest Grossing Worldwide film at the Box Office. Star Wars Broken this Record? It Raises the Question in Everyone's Mind.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil