»   »  உலகம் முழுவதும் சாதனை படைத்த ஸ்டார் வார்ஸ் 7... இன்று முதல் தமிழிலும்

உலகம் முழுவதும் சாதனை படைத்த ஸ்டார் வார்ஸ் 7... இன்று முதல் தமிழிலும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: உலகம் முழுவதும் வசூலில் பட்டையைக் கிளப்பி வரும் ஸ்டார் வார்ஸ் 7, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று தமிழிலும் வெளியாகி இருக்கிறது.

இதற்கு முன் வெளியான 6 பாகங்களும் வசூலில் அதிரிபுதிரியான பல்வேறு சாதனைகளை படைத்த நிலையில் அதன் 7 வது பாகமும் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

இன்று இந்தியா முழுவதும் வெளியாகி இருக்கும் இப்படத்தின் சமீபத்திய சாதனைகள் குறித்து பார்க்கலாம்.

ஸ்டார் வார்ஸ் 7

ஸ்டார் வார்ஸ் 7

30 வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் படம் தான் ஸ்டார் வார்ஸ். தற்போது இந்தப் படத்தின் 7 வது பாகமான ஸ்டார் வார்ஸ் 7 தி போர்ஸ் அவெக்கன்ஸ் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது.

ஜே.ஜே.ஆப்ராம்ஸ்

ஜே.ஜே.ஆப்ராம்ஸ்

ஜே.ஜே.ஆப்ராம்ஸ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் ஹாரிசன் போர்ட், மார்க் ஹமில், கேரி பிஷெர், ஆடம் டிரைவர், டெய்சி ரிட்லி உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர்.

முதல் வாரத்தில்

முதல் வாரத்தில்

ஸ்டார் வார்ஸ் 7 வெளியான முதல் வாரத்தில் 330 கோடி 88 லட்சங்களை வசூலித்து வசூலில் புதிய சாதனையை படைத்தது. மேலும் வெளியான 12 நாட்களில் சுமார் 1 பில்லியன் டாலர்களை வசூலித்து ஒரு புதிய சாதனையையும் படைத்து இருக்கிறது.இதற்கு முன்னர் ஜுராசிக் பார்க் திரைப்படம் வெளியான 13 நாட்களில் இந்த சாதனையைப் படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக

முன்னதாக

இந்தப் படத்தை டிசம்பர் 18ம் தேதி இந்தியா முழுவதும் வெளியிட ஸ்டார் வார்ஸ் குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் தில்வாலே மற்றும் பாஜிரோ மஸ்தானி போன்ற படங்களின் வெளியீட்டால் இந்தப் படம் தள்ளி வைக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ்

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்டார் வார்ஸ் 7 திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி இருக்கிறது. மேலும் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழகத்திலும் இன்று இப்படம் வெளியாகி உள்ளது. ஹாலிவுட் படம் என்றாலும் கூட பசங்க 2, பூலோகம் ஆகிய படங்களுக்கு ஸ்டார் வார்ஸ் கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை காலம்

விடுமுறை காலம்

தமிழகத்தில் தற்போது விடுமுறைக் காலம் என்பதால் பெரியவர்களுடன் இணைந்து குழந்தைகளும் வேற்றுக்கிரக வாசிகளையும், லேசர் கத்தியின் சுழற்சிகளையும் காண மிகவும் உற்சாகம் காட்டி வருகின்றனர். மொத்தத்தில் இன்று வெளியாகி இருக்கும் ஸ்டார் வார்ஸ் 7 திரைப்படம் இந்தியா முழுவதும் வசூலில் புதிய சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Star Wars 7 in Collections around the world, today Start the Festival of Christmas has been Released in Tamil.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil