»   »  பிரபல ஹீரோவின் படப்பிடிப்பில் விபத்து: பைக் சாகசத்தின்போது நடிகை பலி

பிரபல ஹீரோவின் படப்பிடிப்பில் விபத்து: பைக் சாகசத்தின்போது நடிகை பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

வான்கூவர்: ஹாலிவுட் படத்தில் பைக்கில் சாகசம் செய்த டூப் நடிகை பலியானார்.

ரயன் ரேனால்டஸ் நடித்து வரும் டெட்பூல் 2 ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் நடந்தது. அப்போது ஸ்டண்ட் காட்சியை படமாக்கினார்கள். ஒரு நடிகை பைக்கில் சாகசம் செய்ய வேண்டும்.

Stunt woman dies in Deadpool 2 shooting

அவருக்கு பதில் டூப் போட்டனர். ஹாரிஸ் என்ற ஸ்டண்ட் பெண் பைக்கில் சாகசம் செய்தார். பைக் விபத்துக்குள்ளாகி ஹாரிஸ் பைக்குடன் பறந்து வந்து ஒரு கட்டிடத்தின் கண்ணாடியில் மோதி கீழே விழுந்தார்.

இதுவும் படக்காட்சி என்று படக்குழு வீடியோ எடுத்தது. பின்னர் தான் அது விபத்து என்று உணர்ந்தனர். இந்த விபத்தில் ஹாரிஸ் பரிதாபமாக உயிர் இழந்தார்.

ஹாரிஸ் பிரேக்கை பயன்படுத்தாததால் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
A stunt woman named Harris died after a stunt sequence in bike went wrong during the shooting of Deadpool 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil