»   »  சம்மர் 2018... இந்த வருஷம் ஹாலிவுட்ல என்ன ஸ்பெஷல்?

சம்மர் 2018... இந்த வருஷம் ஹாலிவுட்ல என்ன ஸ்பெஷல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்தியா என்றல்ல.. உலகம் முழுவதுமே, திரைப்படத்துறைக்கு பெரிய சீஸன் என்றால் அது கோடைக்காலம்தான்.

பிப்ரவரி தொடங்கி ஜூன் மாதம் வரையிலான சீஸனைத்தான் பெரிய படங்கள் அத்தனையும் குறி வைக்கும். ஸ்பைடர்மேன், அவெஞ்சர்ஸ், ஸ்டார் வார்ஸ், ஜூராஸிக் வேர்ல்ட் போன்ற படங்களின் டார்கெட் எல்லாம் இந்த சம்மர் காலம்தான்.

இந்த ஆண்டும் பல பெரிய படங்கள் கோடைக் காலத்தை குறிவைத்து ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.

அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:

டாம் ரைடர்

டாம் ரைடர்

இந்த மார்ச் 16-ம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது டாம் ரைடர். அலிசியா விகான்டர், டொமினிக் வெஸ்ட் நடித்துள்ள இந்தப் படம் வார்னர் பிரதர்ஸ் வெளியீடாக வருகிறது.

சூப்பர் ட்ரூப்பர்ஸ் 2

சூப்பர் ட்ரூப்பர்ஸ் 2

ஜெய் சந்திரசேகர் (நம்ம ஊர்க்காரர்தான்) இயக்கத்தில் இயக்கம் நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்த சூப்பர் ட்ரூப்பர்ஸ். காமெடி த்ரில்லர். ஃபாக்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்ஸ்

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்ஸ்

அவெஞ்சர்ஸ் தொடரின் அடுத்த பாகம் இந்த இன்ஃபினிட்டி வார்ஸ். மார்வெல் ஸ்டுடியோ வெளியீடு. ராபர்ட் டவுனி ஜுனியர், ஜோஷ் ப்ரோலின் நடித்துள்ள படம்.

டெட்பூல் 2

டெட்பூல் 2

இதுவும் மார்வெல் காமிக்ஸ் நிறுவன வெளியீடு. ரையான் ரெனால்ட்ஸ், ஜோஷ் ப்ரோலின் நடித்துள்ள இந்தப் படம் ஒரு சூப்பர் ஹீரோ கதை, ஸ்பைடர்மேன் மாதிரி.

சோலோ: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி

சோலோ: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி

விண்வெளிக் கதையை மையப்படுத்தி வரும் படம். வால்ட் டிஸ்னி வெளியிடும் இந்தப் படத்தில் ஆல்டன் எஹ்ரென்ரிச், வூடி ஹாரல்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பில் லார்ட், கிறிஸ்டோபர் மில்லர், ரான் ஹோவர்ட் இயக்கியுள்ளனர்.

 தி இன்க்ரிடிபிள்ஸ் 2

தி இன்க்ரிடிபிள்ஸ் 2

அனிமேஷன் சூப்பர் ஹீரோ படம் இது. வால்ட் டிஸ்னியின் இன்னொரு சம்மர் ரிலீஸ். ஹோலி ஹன்டர், சாரா வாவல் நடித்துள்ளனர். பிராட் பர்ட் இயக்கியுள்ளார்.

ஜூராசிக் வேர்ல்ட்: தி ஃபாலன் கிங்டம்

ஜூராசிக் வேர்ல்ட்: தி ஃபாலன் கிங்டம்

ஜூராசிக் பார்க் தொடரின் 5வது பகுதி இந்தப் படம். இன்னும் இரு பாகங்களும வரவிருக்கின்றன. யுனிவர்சல் பிக்சர்ஸின் வெளியீடான இந்தப் படம்தான் இந்த ஆண்டின் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் ஹாலிவுட் படம். வெளியாகும் தேதி ஜூன் 22.

English summary
List of Hollywood big movies releasing Summer 2018

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil