»   »  சம்மர் ஹாலிடேஸை "டார்கெட்" செய்து குட்டீஸ்களை "அட்டாக்" செய்த ஆங்கிரி பேர்ட்ஸ்!

சம்மர் ஹாலிடேஸை "டார்கெட்" செய்து குட்டீஸ்களை "அட்டாக்" செய்த ஆங்கிரி பேர்ட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹாலிவுட் படமான ‘ஆங்கிரி பேர்ட்ஸ்' படம் தமிழில் மொழிமாற்றம் செய்து இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

விளம்பரங்கள் முதல் திரைப்படங்கள் வரை குழந்தைகளை மையப்படுத்தி தயாரிக்கப் படுபவை வியாபார உலகில் தோற்றுப் போவதில்லை. இதனாலே குழந்தைகளுக்கான பென்சில் முதல் விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள் என எல்லாவற்றிற்குமே அதிக விலை தான் நிர்ணயிக்கப்படுகிறது. நாமும் பெரும்பாலும் இவற்றிற்கு பேரம் பேசாமலேயே வாங்கி விடுகிறோம்.

அந்தவகையில், கோடை விடுமுறையில் குழந்தைகளை டார்கெட் செய்து ரிலீசாகியுள்ளது இந்த ஆங்கிரி பேர்ட்ஸ்.

ஆங்கிரி பேர்ட்ஸ்...

ஆங்கிரி பேர்ட்ஸ்...

குழந்தைகளுக்கான ஹாலிவுட் திரைப்பட வரிசையில் வெளிவந்துள்ள இந்தப் படமானது, செல்போனில் உள்ள கேம்களில் மிகவும் பிரபலமான ‘ஆங்கிரி பேர்ட்ஸ்' (Angry birds) கேமை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குநர்கள்...

புதுமுக இயக்குநர்கள்...

புதுமுக இயக்குனர்களான க்ளே கய்டிஸ் மற்றும் பெர்கல் ரெய்லி ஆகியோரின் இயக்கத்தில் 73
மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வசூலில் சாதனை
புரிந்த ஜங்கிள் புக் திரைப்படத்தின்போது இப்படத்தின் டிரைலரும் சேர்ந்து ஒளிபரப்பட்டதால்,
அப்போதே குழந்தைகள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறி விட்டது.

யூ/ஏ சான்றிதழ்...

யூ/ஏ சான்றிதழ்...

இந்த அனிமேஷன் படத்திற்கு இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் குழந்தைகளை அச்சம் கொள்ள வைக்கும் காட்சிகள் வருவதால் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் இப்படத்தை பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விறுவிறுப்பு...

விறுவிறுப்பு...

விளையாட்டில் ஏற்படும் விறுவிறுப்பு சற்று குறையாமல் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படத்தைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர். நகைச்சுவை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடங்கள்...

பாடங்கள்...

ஆங்கிரி பேர்ட் மூலமாக குழந்தைகளுக்கு சில வாழ்வியல் பாடங்களைக் கற்றுத்தர இயக்குநர் முயற்சித்திருக்கிறார். ஆனால், அவை முழுவதுமாக குழந்தைகளைப் போய்ச் சேருமா என்பது சந்தேகமே.

வித்தியாசமான அனுபவம்...

வித்தியாசமான அனுபவம்...

மற்றபடி, நிச்சயமாக குழந்தைகளுக்கான மற்றொரு பொழுதுபோக்கு படமாக இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் இருக்கும் என்பதில் மறுப்பில்லை. இதுவரை செல்போனில் சின்னச் சின்னதாக பார்த்த ஆங்கிரி பேர்டை வெள்ளித் திரையில் அதுவும் 3டி எபெக்டில் பார்ப்பது ஆங்கிரி பேர்ட்ஸ் ரசிகர்களுக்கு நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாகத் தான் இருக்கும்.

English summary
"Angry Birds" that started off as a video game way back in 2009 has finally been launched as a film and will soon become a franchise. This animated film in 3D from Sony's stable shoehorns itself into the kids' entertainment arena unabashedly with its colourful and delightfully mesmerising palette.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil