»   »  ரசிகர்களின் பேய் மோகத்தால்... மொத்த பட்ஜெட்டையும் முதல் வாரத்திலேயே வசூலித்தது 'தி கஞ்சூரிங் 2'

ரசிகர்களின் பேய் மோகத்தால்... மொத்த பட்ஜெட்டையும் முதல் வாரத்திலேயே வசூலித்தது 'தி கஞ்சூரிங் 2'

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: கடந்த வாரம் வெளியான தி கஞ்சூரிங் 2 திரைப்படம் உலகம் முழுவதும், சுமார் 39 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் தி கஞ்சூரிங் 2 உலகம் முழுவதும் சுமார் 9,800 திரையரங்குகளில் வெளியானது. முதல் படமான கஞ்சூரிங் போலவே இப்படமும் பயங்கர மிரட்டலாக இருக்கிறது என படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டியிருந்தனர்.

The Conjuring 2 Collects 39 Million Dollars in first week

இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படம் 39 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதுதவிர இப்படத்துடன் வெளியான வார்கிராப்ட், நவ் யூ சீ மீ 2 போன்ற படங்களின் வசூலையும் இப்படம் கட்டுப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் இப்படத்தின் மொத்த பட்ஜெட்டான 40 மில்லியன் டாலர்களை முதல் வாரத்திலேயே கஞ்சூரிங் 2 வசூல் செய்து விட்டது.

இப்படத்தின் முதல் பாகம் 19.5 மில்லியன் டாலர்களுடன் வெளியாகி உலகம் முழுவதும் 318 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது.அதேபோல கஞ்சூரிங் 2வும் மிகப்பெரிய சாதனை படைக்கும் என ஹாலிவுட் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

The Conjuring 2 Collects 39 Million Dollars in first week

இந்தியாவில் தமிழ், தெலுங்கு,ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளியான இப்படத்துக்கு, இந்திய ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Box Office:The Conjuring 2 collects 39 Million Dollars in first weekend.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil