»   »  40 நாட்களில் 250 கோடியைத் தாண்டியது.. இந்தியச் சிறுவனின் 'தி ஜங்கிள் புக்'

40 நாட்களில் 250 கோடியைத் தாண்டியது.. இந்தியச் சிறுவனின் 'தி ஜங்கிள் புக்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: இந்தியாவில் மட்டும் 250 கோடிகளை வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது 'தி ஜங்கிள் புக்' திரைப்படம்.

ஏப்ரல் 8 ம் தேதி இந்தியாவில் வெளியான இப்படம் 6 வாரங்கள் முடிவில் 250 கோடிகளை வசூலித்து, இந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

The Jungle Book grosses 250 crore in India

காட்டிற்குள் தனியாக விடப்பட்ட சிறுவனை அங்கிருக்கும் விலங்குகள் எடுத்து வளர்க்கும். அந்த சிறுவனை புலி ஒன்று கொல்ல முயல, மற்ற விலங்குகள் புலியிடம் இருந்து சிறுவனைக் காப்பாற்றுவதுதான் இப்படத்தின் கதை.

தமிழ் இந்தி, தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் சிறுவர்களுடன் சேர்த்து பெரியவர்களுக்கும், நல்லதொரு கோடை விருந்தாக அமைந்தது.

அக்காலத்தில் கார்ட்டூன் தொடராக வெளியான ஜங்கிள் புக் பலருக்கும் மலரும் நினைவுகளைத் தூண்டிவிட்டதில், 6 வாரங்களைக் கடந்தும் இப்படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை.

மற்றொருபுறம் 'தி கேப்டன் அமெரிக்கா சிவில் வார்' 11 நாட்கள் முடிவில் 73 கோடிகளை இந்தியாவில் வசூலித்துள்ளது. விரைவில் இப்படம் 100 கோடிகளைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை விடுமுறை, பாலிவுட்டில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகாதது போன்ற காரணங்களால், ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வசூலைக் குவித்து வருகின்றன.

'தி ஜங்கிள் புக்' படத்தில் சிறுவனாக நடித்த நீல் சேதி(12) இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Box Office:The Jungle Book Grosses 250 crore in India.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil