Don't Miss!
- News
இதெல்லாம் பூலோகத்தில் உண்டா? ரெடியாகாத வேட்பாளர்.. எடப்பாடி திணறுகிறாராமே? இவர் இப்படி சொல்லுறாரே?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல.. ரொம்ப கம்மி!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Year Ender 2022 : இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த திரை பிரபலங்கள்!
சென்னை : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும், திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்று திருமணம் பற்றி பல பழமொழிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
திருமணம் என்பது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை திறக்கும் சாவியாக உள்ளது. இந்த ஆண்டு திரைப்பிரபலங்களுக்கு ஓர் நல்ல ஆண்டாகவே அமைந்துள்ளது.
நயன்தாரா முதல் ஹன்சிகா வரை பல நட்சத்திரங்களும் இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். அதன்படி இந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட திரை பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாமா?

நயன்தாரா-விக்னேஷ் சிவன்
இந்த ஆண்டு நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் ஜோடிக்கு ஒரு நல்ல ஆண்டாகவே இருந்தது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் காதலித்துக் கொண்டிருந்த இந்த ஜோடி இந்த ஆண்டு ஜூன் மாதம் 9ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரெஸ்டாரன்டில் தடபுடலாக நடந்தது.

ஆதி-நிக்கி கல்ராணி
மரகதநாணயம் படத்தில் இணைந்து நடித்த போது ஆதியும் நிக்கி கல்ராணியும் காதலிக்கத் தொடங்கினர். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் மே மாதம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களின் திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். மெஹந்தி, சங்கீத், திருமண புகைப்படம் என பல சடங்குகள் நடத்தப்பட்டன.

ஹன்சிகா மோத்வானி- சோஹேல் கதுரியா
ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா திருமணம் டிசம்பர் 4ந் தேதி அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு படுஜோராக நடந்து முடிந்தது. இவர்களில் திருமணத்திற்காக 450 ஆண்டு பழமையான அரண்மனை வண்ண விளக்குகளால் ஜொலித்தது. இவர்களில் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஹரிஷ் கல்யாண்-நர்மதா
பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் டீன் ஏஜ் பெண்களின் கனவு நாயகனாக இருந்த ஹரிஷ் கல்யாண் தனது நீண்ட நாள் தோழியான நர்மதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் அக்டோபர் 28ந் தேதி திருவேற்காட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஆலியா பட் - ரன்பீர் கபூர்
பிரபல பாலிவுட் ஜோடியான ஆலியா பட் ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு ஏப்ரல் 14ஆம் நாள் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஆலியா பட் ரன்பீர் கபூரும் முதல் படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கி இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.தற்போது நடிகை ஆலியாபட்டிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன்
நவரச நாயகன் கார்த்தியின் மகனான கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினர். இதையடுத்து, நவம்பர் மாதம் சென்னையில் இவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

பூர்ணா-ஆசிப் அலி
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூர்ணாவுக்கும் ஆசிப் அலிக்கும் ஜூன் திருமணம் நடந்தது. ஆசிப் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் என்பதால், துபாயில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்தது. பூர்ணா தற்போது கணவருடன் துபாயில் வசித்து வருகிறார்.

இமான்-அமேலியா
இசையமைப்பாளர் டி இமான் கோலிவுட் நடிகர் உபால்டின் மகள் அமெலியாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மகாலட்சுமி-ரவீந்தரன்
இந்த ஆண்டு மிகவும் பேசப்பட்ட திருமணம் என்றால் அது தயாரிப்பாளர் ரவீந்தரன் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திருமணம் தான். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் காதும் காதும் வைத்த மாதிரி செப்டம்பர் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சோஷியல் மீடியாவையே திணற அடித்தது. யூடியூப், சேனல் என எங்கு பார்த்தாலும் இவர்களின் திருமணம் பற்றிய பேச்சுத்தான்.