»   »  பாக்ஸ் ஆபீஸில் பலத்த புயலை உருவாக்கிய "த மார்ஷியன்"

பாக்ஸ் ஆபீஸில் பலத்த புயலை உருவாக்கிய "த மார்ஷியன்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: கடந்த 2 ம் தேதி உலகம் முழுவதும் வெளியான த மார்ஷியன் திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிசை ஆட்டிப் படைத்து வருகிறது.

வெளியான 3 தினங்களுக்குள் போட்ட பணத்தில் 90% மேல் படம் வசூலித்து இருப்பதாக டுவென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளரும், உள்நாட்டு விநியோக அதிகாரியுமான கிரிஸ் ஆரோன்சன் தெரிவித்து இருக்கிறார்.

சுமார் 108 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இதுவரை 100.2 மில்லியன் டாலர்களை உலகவில் வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.

த மார்ஷியன்

த மார்ஷியன்

செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சி செய்ய ஒரு குழுவினர் செல்கின்றனர். அங்கு வீசும் கடுமையான பனிப்புயலில் ஹீரோ மாட் டாமன் மாட்டிக் கொள்கிறார். அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து அவரை அங்கேயே விட்டு வந்து விடுகின்றனர். தனியாக மாட்டிக் கொள்ளும் ஹீரோ தான் உயிரோடு இருப்பதை பூமிக்கு தொடர்பு கொண்டு சொல்ல முயற்சிக்கிறார்.

முயற்சியும்- சதியும்

முயற்சியும்- சதியும்

நாசா விஞ்ஞானிகள் அவரைக் காப்பாற்ற முயற்சிக்க, அவருடன் பணிப் புரிந்த சக ஆராய்ச்சியாளர்கள் அந்த காப்பாற்றும் முயற்சியை முறியடிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த சூழ் நிலையில் சர்வதேச நாடுகள் மாட் டாமன் பூமிக்கு திரும்ப வர முயற்சி மேற்கொள்கின்றன. அவர்களின் முயற்சி வெற்றிபெற்றதா? ஹீரோ பூமிக்குத் திரும்பினாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.

கடந்த வாரம்

கடந்த வாரம்

கடந்த 2 ம் தேதி உலகம் முழுவதும் வெளியான த மார்ஷியன் திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை செய்து வருகிறது.108 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இதுவரை 100.2 மில்லியன் டாலர்களை உலகவில் வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது. 2D மற்றும் 3D யில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்தப் படத்தை ஆதரிப்பதாக 20 செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளரும், உள்நாட்டு விநியோக அதிகாரியுமான கிரிஸ் ஆரோன்சன் தெரிவித்து இருக்கிறார்.

புண்ணியம் செய்த நாசா

புண்ணியம் செய்த நாசா

இந்தப் படம் வெளிவருவதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் பொங்கி வழிகிறது நீங்கள் சென்று உங்களுக்கு வேண்டிய அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டது நாசா. படம் வெளிவரும் சமயத்தில் நாசா வெளியிட்ட இந்த அறிக்கை படத்திற்கு இலவச விளம்பரத்தை தேடிக் கொடுத்திருக்கிறது.

சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்கள்

படத்தைப் பார்த்த இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் த மார்ஷியனுக்கு நல்லதொரு விமர்சனத்தை அளித்து வருகின்றனர். மேலும் படத்தைப் பார்த்த 70% மற்றவர்களையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்தப் படத்தின் உணர்வினை நேரில் அனுபவிக்கும் ஆசையில் சுமார் 46% 3D முறையில் இந்தப் படத்தைப் பார்த்து ரசித்திருக்கின்றனராம்.

ஆஸ்கர் பிரிவில்

ஆஸ்கர் பிரிவில்

2015 - 2016ம் ஆண்டிற்கான ஆஸ்கர் போட்டியில் சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த காட்சியமைப்பு மற்றும் சிறந்த ஒலிக்கலவை போன்ற 3 பிரிவுகளில் போட்டியிட தகுதி பெற்றிருக்கிறது த மார்ஷியன்.

அடுத்தடுத்த நாட்களில்

அடுத்தடுத்த நாட்களில்

போட்ட பணத்தை முதல் வாரத்திலேயே எடுத்து விட்டதால் அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் முழுவதுமே த மார்ஷியன் படத்தை எடுத்தவர்களுக்கு லாபமாக அமையவிருக்கிறது.

மொத்தத்தில் த மார்ஷியன் திரைப்படம் நாசாவின் புண்ணியத்தால் உலகளவில் நன்கு கல்லா கட்டிவருகிறது.

English summary
The Martian Science Fiction Film released in theaters in 2D and 3D. Within 3 Days the Martian Movie has grossed $100.2 Dollars in Worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil