இதுதான் என் கடைசி படம்.. இனி நடிக்க மாட்டேன்.. சினிமாவுக்கு குட்பை சொன்ன ஜிம் கேரி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: மாஸ்க், ப்ரூஸ் தி அல்மைட்டி உள்ளிட்ட பல படங்கள் மூலம் உலக ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் தனது ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

1983ம் ஆண்டு வெளியான The Sex and Violence Family Hour படம் மூலம் அறிமுகமானவர் ஜிம் கேரி.

1994ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஏஸ் வென்ச்சுரா, மாஸ்க்,, டம்ப் அண்ட் டம்பர் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. அதிலும், மாஸ்க் திரைப்படம் உலகளவில் இவருக்கு ரசிகர்களை பெற்றுத் தந்தது.

ஜிம் கேரி

ஜிம் கேரி

ஹாலிவுட்டின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் நடிகர் ஜிம் கேரிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. தி மாஸ்க், பேட்மேன் ஃபார் எவர், ப்ரூஸ் தி அல்மைட்டி, கிக் ஆஸ் 2, லயர் லயர் என ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து அசத்தியவர் ஜிம் கேரி. சந்தோஷத்தை கொடுக்கும் நகைச்சுவை நடிகர்கள் வாழ்வில் ஏகப்பட்ட சோக நிகழ்வுகள் நடப்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டதை போல, இவரது வாழ்க்கையிலும் ஏகப்பட்ட டிராஜடிக்கள் நடந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் ஜிம் கேரி.

அறை எண் 305ல் கடவுள்

அறை எண் 305ல் கடவுள்

ஷங்கர் தயாரிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான அறை எண் 305ல் கடவுள் அப்படியே இவர் நடித்த ப்ரூஸ் தி அல்மைட்டி படத்தின் காப்பி தான் சர்ச்சைகள் கிளம்பின. ப்ரூஸ் தி அல்மைட்டி படத்தை வைத்து உலகம் முழுக்க ஏகப்பட்ட இன்ஸ்பிரேஷன் படங்கள் உருவாகியது குறிப்பிடத்தக்கது.

சினிமாவுக்கு குட்பை

சினிமாவுக்கு குட்பை

60 வயதாகும் நடிகர் ஜிம் கேரி தற்போது திடீரென சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். 42 படங்கள், 17 டிவி தொடர்கள், 16 ஆவண படங்கள், ஒரு வெப்சீரிஸ் என நடித்து வந்த ஜிம் கேரி ஏன் திடீரென இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என ஹாலிவுட் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

இதுதான் கடைசி

இதுதான் கடைசி

கடந்த 2020ம் ஆண்டு ஜிம் கேரி நடிப்பில் கடைசியாக வெளியான படம் Sonic the Hedgehog திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் இரண்டாம் பாகமான Sonic the Hedgehog 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படம் தான் தனக்கு கடைசி படம் என்றும், நிறைய நடித்து விட்டேன். போதும், இப்போது ஓய்வெடுக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

ப்ரூஸ் வில்லிஸ் ஓய்வு

ப்ரூஸ் வில்லிஸ் ஓய்வு

சமீபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ் Aphasia எனும் மூளை பாதிப்பால் அவதிப்பட்டு வரும் காரணத்தால் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என அதிரடியாக அறிவித்திருந்தார். அவரை தொடர்ந்து நடிகர் ஜிம் கேரியும் தனது சினிமா வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்டிருப்பது ஹாலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X