Don't Miss!
- News
இதுதான் ரிஷி சுனக்.. விதியை மீறிய மூத்த அமைச்சர்.. ஒரே அடியாக தூக்கிய ரிஷி சுனக்! அதிரடி நடவடிக்கை
- Automobiles
இன்றைய 2023ஆம் காலக்கட்டத்தில் இந்த அம்சங்கள் இன்றி கார் வாங்குவதே வேஸ்ட்! உங்க கார்களில் என்னென்ன மிஸ் ஆகுது?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Technology
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
ஆஸ்கரையும் விட்டு வைக்காத கொரோனா.. இப்படியொரு திடீர் முடிவுக்கு வந்த அகாடமி.. உற்சாகத்தில் OTT!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா பாதிப்பால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாத படங்களும் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை அகாடமி அறிவித்திருக்கிறது.
Recommended Video
கொரோனா பாதிப்பு உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது. அமெரிக்காவில் அதன் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் சில தளர்வுகளை முதன்முறையாக ஆஸ்கர் குழு அனுமதி அளித்திருக்கிறது.
93வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடைபெற உள்ளது.
மாஸ் அப்டேட்.. ஷாருக்கான் இல்லை.. தெறி இந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது யார் தெரியுமா?
கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்கா உள்பட உலக நாடுகள் அனைத்திலும் தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கின்றன.
இதனால், தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக OTT பிளாட்ஃபார்ம்களில் வெளியாகும் படங்களும் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் அனுமதியை ஆஸ்கர் குழுத் தலைவர் டேவிட் ரூபின் மற்றும் முக்கிய பொறுப்பு வகிக்கும் டான் ஹட்சன் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்கர் கமிட்டியை பொறுத்தவரையில் தியேட்டர்களில் வெளியாகி ஓடாத எந்த படத்தையும் விருதுக்கு தகுதி பெறும் போட்டியில் பங்கேற்க இதுவரை அனுமதியளித்தது கிடையாது. ஆனால், தற்போதைய சூழலை கொரோனா வைரஸ் பயங்கரமாக மாற்றியிருக்கிறது.
இதன் காரணமாக, இந்த ஆண்டு மட்டும் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் போன்ற ஆன்லைன் பிளாட்ஃபார்மில் நேரடியாக ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கும் முடிவுக்கு ஆஸ்கர் குழு வந்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆஸ்கர் ரேஸில் அதிகப்படியான படங்களை களமிறக்கிய நெட்பிளிக்ஸ் ஆன்லைன் பிளாட்ஃபார்ம் தங்களது படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்த பின்னரே, ஆஸ்கர் போட்டிக்கு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்கர் குழுவின் இந்த அதிரடி அறிவிப்பு OTT முதலாளிகளுக்கு கூடுதல் சுமையின்றி ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு குறைந்தாலும், தியேட்டர்கள் திறக்க இந்த ஆண்டு இறுதி வரை ஆகலாம் என்றும், மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு செல்ல துணிவார்களா? என்பது சந்தேகம் என்பதால், OTT தான் சினிமா உலகின் எதிர்காலமாக மாறுமா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.