»   »  'தி கஞ்சூரிங் 2' திகில் கலந்த மிரட்டல்... ரசிகர்கள் பாராட்டு மழை!

'தி கஞ்சூரிங் 2' திகில் கலந்த மிரட்டல்... ரசிகர்கள் பாராட்டு மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2013 ம் ஆண்டு வெளியாகி பேய்ப்படங்களுக்கு புதிய இலக்கணத்தை எழுதிய படம் தி கஞ்சூரிங். கத்தி, ரத்தம் இல்லாமல் பார்ப்பவர்களை உறையச் செய்த இப்படத்தின் 2 வது பகுதி இன்று இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.

முதல் படத்தை இயக்கிய ஜேம்ஸ் வான் 2 வது பாகத்தையும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஒரு தாய் தனது 4 குழந்தைகளுடன் தனியாக லண்டனில் வசிக்கிறார்.

அவர்களுக்கு அந்த வீட்டில் சில திடுக்கிடும் அனுபவங்கள் ஏற்படுகின்றன. இதனை பேய் ஆராய்ச்சியாளர்கள் எப்படித் தடுக்கின்றனர் என்பதே கதை.

உலகம் முழுவதும் 7 ம் தேதி வெளியான இப்படம் இன்று இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

இந்திய ரசிகர்களை தி கஞ்சூரிங் 2 மிரட்டியதா? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஜேம்ஸ் வான்

தி கஞ்சூரிங் 2 பார்ப்பதற்கு நல்ல படம். இயக்குநர் ஜேம்ஸ் வான் திகில் படங்களின் மாஸ்டர் என்பதை நிரூபித்து விட்டார் என சந்தீப் பாராட்டியிருக்கிறார்.

ஆரம்பத்தில்

தி கஞ்சூரிங் 2 ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையிலான காட்சிகள் நம்மை அச்சுறுத்தி சில்லிடச் செய்கின்றன. படத்தின் ஒரிஜினலை மாற்றாமல் கொடுத்த ஜேம்ஸ் வானுக்கு பாராட்டுக்கள் என ஜியோ கூறியிருக்கிறார்.

இன்றிரவு

கண்டிப்பாக இன்றிரவு என்னால் தூங்க முடியாது என ஸ்டீவன் கூறியிருக்கிறார்.

தகுதியான படம்

தி கஞ்சூரிங் 2 பார்ப்பதற்குத் தகுதியான படம் தான் என ஹர்ஷா பாராட்டியிருக்கிறார்.

English summary
The Conjuring 2 the Hollywood Movie Released Today in India. Written and Directed by James Wan-Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil