»   »  மாதம் ரூ.13 கோடி செலவு செய்யும் நடிகரை பார்த்திருக்கிறீர்களா?

மாதம் ரூ.13 கோடி செலவு செய்யும் நடிகரை பார்த்திருக்கிறீர்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மாதம் ரூ.13 கோடி செலவு செய்து ஆடம்பரமாக வாழ்ந்து தற்போது பணக் கஷ்டத்தில் உள்ளார்.

பைரடஸ் ஆப் தி கரீபியன் பட புகழ் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் படாடோப வாழ்வு வாழ்வது தெரிய வந்துள்ளது. இரண்டு முறை திருமணமான அவர் தற்போது சிங்கிளாக உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பணப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ரூ.13 கோடி

ரூ.13 கோடி

ஜானி டெப் மாதம் ரூ.13 கோடி செலவு செய்வது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது ஏஜெண்ட்டை பணிநீக்கம் செய்துள்ளார். மேலும் தனது பிசினஸ் மேனேஜர்கள் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார்.

டெப்

டெப்

ஜானி டெப்பின் நிதி நிலைமையை கவனித்து வந்த மான்டல் நிறுவனத்தின் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பண விஷயத்தில் அந்த நிறுவனம் தனக்கு தெரியாமல் ஏதேதோ செய்துள்ளதாக டெப் குற்றம் சாட்டியுள்ளார்.

செலவு

செலவு

ஜானி டெப் வழக்கு தொடர்ந்ததை அடுத்து மான்டல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அவரின் நிதி நிலைமையை கவனித்து வந்தது உண்மை தான். ஆனால் அவர் செலவு செய்வதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. அவர் மாதத்திற்கு ரூ.13 கோடி செலவு செய்துவிட்டு நாங்கள் ஏதோ செய்ததாக கூறுகிறார் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடி

குடி

ஜானி டெப் அளவே இல்லாமல் ஒயின் குடிப்பாராம். அவருக்கு 14 வீடுகள் உள்ளது. அதிலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரே கட்டிடத்தில் 5 வீடுகள் உள்ளன. இந்நிலையில் அவர் அந்த 5 வீடுகளை விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

English summary
Hollywood actor Johnny Depp is broke as he has the habit of spending Rs. 13 crore a month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil