»   »  வளர்ப்பு மகள் கல்யாணத்திற்கு வராமல் போன டாம் க்ரூஸ்

வளர்ப்பு மகள் கல்யாணத்திற்கு வராமல் போன டாம் க்ரூஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: உலகளவில் அதிரடி நடிகர் என்று பெயரெடுத்த டாம் குரூஸ் தனது வளர்ப்பு மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

டாம் குரூஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி நிக்கோல் கிட்மேன் ஆகியோரின் வளர்ப்பு மகளான இசபெல்லாவின் திருமணம் கடந்த மாதம் 18ம் தேதி ரகசியமாக லண்டனில் உள்ள டோர்செஸ்டார் ஹோட்டலில் ரகசியமாக நடைபெற்றது.

Tom Cruise Absent From his Daughter’s Wedding

டாம் குரூஸ் நிச்சயம் வருவார் என்னும் நம்பிக்கையில் அவரது மகளான இசபெல்லா மிகவும் குறைவான நண்பர்களையே தனது திருமணத்திற்கு அழைத்திருந்தாராம்.

ஆனால் டாம் குரூஸ் திருமண விழாவில் பங்கு கொள்ளவில்லை. மேலும் இசபெல்லாவின் தாயார் நிக்கோல் கிட்மேன் மற்றும் இசபெல்லாவின் சகோதரர் கொன்னேர் (வளர்ப்பு மகன்) ஆகியோரும் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லையாம்.

இசபெல்லாவின் காதலர் ஐடி ஆலோசகராகப் பணிபுரிகிறார் எனினும் அவர் பிறப்பால் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதுதான் டாம் குரூஸ் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்று கூறுகின்றனர்.

டாம் குரூஸ் றோம் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இசபெல்லாவின் தாயார் நிக்கோல் கிட்மேன் அவளது புதிய நண்பர்களுடன் அவள் சந்தோஷமாக வாழட்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்.

English summary
Hollywood Actor Tom Cruise Absent From his Daughter’s Secret London Wedding. The Reason is Tom Cruise Daughter Isabella Cruise Marries a Non-Scientologist.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil