»   »  30 வருட திரைவாழ்க்கையில் சிங்கிள் தோல்வியைக் கூட சுவைக்காத டாம் குரூஸ்

30 வருட திரைவாழ்க்கையில் சிங்கிள் தோல்வியைக் கூட சுவைக்காத டாம் குரூஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் ஹாலிவுட் நடிகர்களில் ஒருவர், உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டவர் டாம் குரூஸ் போன்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரார் ஆக்க்ஷன் நடிகர் டாம் குரூஸ்.

அதிரடி ஆக்க்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சத்தைக் கவர்ந்த டாம் குரூஸ் உலகின் மிகப்பெரிய 4 வது பணக்காரராக உருவெடுத்திருக்கிறார்(நடிகர்களில்), 1981 ம் ஆண்டில் தனது 19 வயதில் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்த டாம் குரூஸ் திரையுலகில் வெற்றிகரமாக 34 வருடங்களைக் கடந்திருக்கிறார்.

இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மிஷன் இம்பாஸிபிள் 5 உலமெங்கும் வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. 30 வருடத்திற்கும் மேற்பட்ட திரைவாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்திருக்கும் டாம் குரூஸைப் பற்றி இங்கு காணலாம்.

டாம் குரூஸ்

டாம் குரூஸ்

1962 ம் வருடம் ஜூலை மாதம் 3 ம் தேதி பிறந்த டாம் குரூஸ், தனது 19 வயதில் என்ட்லஸ் லவ் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். 1983 ம் ஆண்டு வெளிவந்த லாஸின் இட் திரைப்படத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்த டாம் குரூஸ், அதே ஆண்டு வெளிவந்த ரிஸ்கி பிசினஸ் மூலம் ஹாலிவுட்டின் வசூல் நாயகனாகவும் உயர்ந்தார்.

டாம் குரூஸின் அந்தஸ்தை உயர்த்திய ரெயின்மேன்

டாம் குரூஸின் அந்தஸ்தை உயர்த்திய ரெயின்மேன்

1988 ம் ஆண்டு வெளியான ரெயின்மேன் திரைப்படம் 25 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் சுமார் 355 மில்லியன்களை வசூலித்து டாம் குரூஸின் அந்தஸ்தை உலகளவில் உயர்த்திப் பிடித்தது.

மிஷன் இம்பாஸிபிள்

மிஷன் இம்பாஸிபிள்

டாம் குரூஸின் அதிரடி ஆக்க்ஷன் நடிப்பில் 1996 ம் ஆண்டு வெளிவந்த மிஷன் இம்பாஸிபிள் திரைப்படம் முரட்டு ஆக்க்ஷன் நாயகனாக டாம் குரூஸை உலகத்திற்கு வெளிப்படுத்தியது. 80 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகமெங்கும் சுமார் 457.7 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை புரிந்தது.

மிஷன் இம்பாஸிபிள் பாகங்கள்

மிஷன் இம்பாஸிபிள் பாகங்கள்

டாம் குரூஸ் நடித்து இதுவரை 5 பாகங்கள் வெளிவந்து விட்டன, ஆனால் ஒவ்வொரு முறையும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர சற்றும் குறையவில்லை. இந்த 19 ஆண்டுகளில் மிஷன் இம்பாஸிபிள் படத்தின் தொடர்ச்சியாக 5 பாகங்கள் வெளிவந்து விட்டன, 5 முறையும் ஈத்தன் ஹன்ட் என்ற பெயரில் எதிரிகளைத் துப்பறியும் ரகசிய உளவாளியாக டாம் குரூஸ் வந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறார்.

34 வருடங்களில் 47 படங்கள்

34 வருடங்களில் 47 படங்கள்

டாம் குரூஸ் நடிக்க வந்த இந்த 34 வருடங்களில் மிஷன் இம்பாஸிபிள் உள்ளிட்ட ஆக்க்ஷன் படங்களையும் சேர்த்து சுமார் 47 படங்கள் நடித்து முடித்திருக்கிறார்.

3 முறை திருமணம்

3 முறை திருமணம்

3 முறை திருமணம் செய்து கொண்ட டாம் குரூஸ் 3 மனைவிகளையும் விவாகரத்து செய்து தற்போது 53 வயதில் நான்காம் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

30 வருடங்களும் ஏறுமுகம்தான்

30 வருடங்களும் ஏறுமுகம்தான்

ஆரம்பகாலத்தில் சின்னசின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த டாம் குரூஸ் நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்த பின்பு இந்த 30 வருடங்களில் ஒரு தோல்வியைக் கூட இதுவரை சுவைத்தது கிடையாது. சில படங்கள் வசூலில் சின்ன அளவில் சறுக்கினாலும் கூட மற்ற வகையில் லாபம் ஈட்டி டாம் குரூஸின் வெற்றி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உதவியுள்ளன.

ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்கள்

ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்கள்

டாம் குரூஸ் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் கட்டாயம் ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டிய 10 படங்கள் ரிஸ்கி பிசினஸ், மிஷன் இம்பாசிபிள் ஹோஸ்ட் புரோட்டோகால், மிஷன் இம்பாஸிபிள் ரப் நேஷன், லைவ் டை ரிபீட் எட்ஜ் ஆப் டுமாரோ, மைனாரிட்டி ரிப்போர்ட், ரெயின் மேன், பார்ன் ஆன் தி போர்த் ஆப் ஜூலை, தி கலர் ஆப் மணி, கொல்லாடேரல் மற்றும் ஜெர்ரி மேகுரே.

இன்னமும் இளமை

இன்னமும் இளமை

52 வயதாகியும் கூட மிஷன் இம்பாஸிபிள் 5 படத்தில் டூப் போடாமல் இளம் நாயகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு டாம் குரூஸ் கலக்கி எடுத்துள்ளார். 150 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 10 நாட்களில் இதுவரை 265 மில்லியன்களுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வயசானாலும் டாம் குரூஸோட அழகும் ஸ்டைலும் இன்னும் குறையவில்லை என்பதற்கு மிஷன் இம்பாஸிபிள் 5 (ரப் நேஷன்) ஒரு சாட்சி.

English summary
Hollywood Actor Tom Cruise Filmography little Round Up.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil