»   »  டாம் க்ரூஸுக்கு காலில் காயம்... மிஷன் இம்பாஸிபிள் 6 படப்பிடிப்பு ரத்து!

டாம் க்ரூஸுக்கு காலில் காயம்... மிஷன் இம்பாஸிபிள் 6 படப்பிடிப்பு ரத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட்(யு.எஸ்): மிஷன் இம்பாஸிபிள் பட வரிசையில் 6 வது படத்தின் படப்பிடிப்பில் டாம் க்ரூஸ் காயமடைந்துள்ளார். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளன.

முழுவதும் குணமான பின்னர் தான் டாம் க்ரூஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அதுவரையிலும் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

Tom cruise injured on set

படம் அடுத்த ஆண்டு ஜூலை 27ம் தேதி வெளிவரும் என்று தேதி நிச்சயக்கப் பட்டுள்ளது. இயக்குனர் க்றிஸ்டோபர் மெக் கெர்ரி, வெளியீட்டு தேதியில் மாற்றம் கிடையாது. குறிப்பிட்ட தேதியில் வெளியாகும். அனைவருடைய ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

அடுத்ததாக டாம் க்ரூஸ் அமெரிக்கன் மேட் ( American Made) என்ற படத்தில் நடிக்க உள்ளார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

English summary
Hollywood actor Tom Cruise was injured on Mission I,mpossble 6 set

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X