twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாம் குரூஸ் - கேதி விவாகரத்துக்கு காரணமான 'சைன்டாலஜி'!

    By Shankar
    |

    Katie Holmes and Tom Cruise
    தன் மூன்றாவது மனைவிக்கு அமைதியாக செட்டில்மென்ட் செய்யும் முடிவில் இருந்த டாம் குரூஸ், அதை மீறி விஷயம் நீதிமன்றத்துக்குப் போய்விட்டதால் பெரும் வருத்தத்தில் உள்ளாராம்.

    ஆனால் இந்தப் பிரிவுக்குக் காரணம் சைன்டாலஜி எனப்படும் மத அமைப்புதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பிரபல ஆலிவுட் நடிகர் டாம்குரூஸ் (49). இவருக்கு ஏற்கெனவே 1987-ம் ஆண்டு மிமி ரோஜர் என்பவரைத் திருமணம் செய்து 1990-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

    1990-ம் ஆண்டு நடிகை நிகோல் கிட்மேனை மணந்தார். இருவரும் 2001-ல் விவாகரத்து பெற்றனர்.

    மூன்றாவதாக கேதி ஹோம்ஸை 2006-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு சூரி என்ற 6 வயது மகள் இருக்கிறாள். டாம்குருசுக்கு முன்னாள் மனைவி நிகோல் கிட்மேன் மூலம் பிறந்த 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இருவருக்குமிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    சைன்டாலஜி

    டாம் க்ரூஸ் தனக்கும் கேதிக்கும் பிறந்த சூரி என்ற 5 வயதுப் பெண்ணை சைன்டாலஜி சர்ச்சுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தாராம். இந்த மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர் டாம் க்ரூஸ். தாய் தந்தை மற்றும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சர்ச்சில் வசிப்பதை சைன்டாலஜி வற்புறுத்துகிறது (கன்யாஸ்த்ரீ வாழ்க்கை மாதிரி).

    மகளை இதிலிருந்து காக்கவே கேதி விவாகரத்து முடிவுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். 'பணம் கேதிக்கு பெரிதல்ல.. மகள் வாழ்க்கை முக்கியம். எனவே இந்த முடிவுக்கு அவர் வந்தார்," என கேதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    மனைவியின் மனப்போக்கு அறிந்து, டைகர் வுட்ஸ் மாதிரி க்ரூஸும்பெரும் தொகையைக் கொடுத்து வெளியில் தெரியாமல் செட்டில்மென்ட் தர முடிவு செய்திருந்தார் (160 மில்லியன் டாலர் சொத்துக்காரர் க்ரூஸ்).

    ஆனால் கேதியோ விவாகரத்து கேட்டு நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனைவியின் இந்த முடிவால் டாம் குரூஸ் மிகவும் மன வருத்தம் அடைந்துள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    கேதி - குரூஸ் தங்கள் காதலை ஈபிள் டவருக்குக் கீழே வெளிப்படுத்தினர். இதனை பாரிசில் பிரஸ் மீட் வைத்து இருவரும் அறிவித்தனர். இருவரின் திருமணமும் இத்தாலியில் மிகுந்த ஆடம்பரமாக ஒரு சொகுசு கப்பலில் நடந்தது நினைவிருக்கலாம்.

    சைன்டாலஜி சர்ச் - ஒரு குறிப்பு

    கோடீஸ்வரர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பு சயின்டாலஜி சர்ச். சீ ஆர்கனைசேஷன் என்ற பெயரும் உண்டு. பெரும் பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளை இங்கே விட்டு விடுவார்கள்.

    குழந்தைகளை அனைத்து நவீன பயிற்சிகளையும் அளித்து வளர்ப்பார்கள். ஐந்து வயது முதலே இங்கு சேர்க்கலாம். ராணுவம் போன்ற கட்டுப்பாடான சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் கெட்ட பழக்கம் இல்லாமல் வளர்வார்கள்.

    பல்வேறு மதங்களில் இருந்தும் நல்ல விஷயங்களைக் கொண்ட சிறப்பான மதம்தான் சயின்டாலஜி என்கிறது இந்த அமைப்பின் வெப்சைட். அதிநவீன விஞ்ஞான, தொழில்நுட்ப உதவியுடன் குழந்தைகளை வளர்த்து, பல்வேறு பயிற்சிகளை அளிப்பார்கள். ரான் ஹப்பர்டு என்பவர்தான் இந்த மதத்தை உருவாக்கினார். அமெரிக்காவை சேர்ந்த இவர் சயின்ஸ் பிக்ஷன் எழுத்தாளர்.

    English summary
    In the centre of the public debate on the breakdown of actor Tom Cruise's marriage with Katie Holmes is a powerful organisation that has quietly extended its clout among the rich and the famous of Hollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X