For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விண்வெளியில் ஷூட்டிங்.. முழுதாய் தயாரான டாம் க்ரூஸ்.. ஸ்பேஸ் வாக் செய்யவும் பக்கா பிளான்!

  |

  சென்னை: ஸ்டார் வார்ஸ், அவதார், அவெஞ்சர்ஸ் என ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் வேற்று கிரங்களுக்கு சென்று படம் எடுத்ததை போல இங்கேயே பிரம்மாண்ட செட்களையும், க்ரீன் மேட் உதவிகளால் கிராவிட்டி போன்ற படங்களையும் எடுத்து அசத்திய நிலையில், அடுத்ததாக வரலாற்று சாதனை படைக்கும் முயற்சியில் ஹாலிவுட் திரையுலகம் விண்வெளிக்கே சென்று ஷூட்டிங் நடத்த ரெடியாகி விட்டது.

  மிஷன் இம்பாசிபிள் படங்களின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் ஈர்த்தவர் நடிகர் டாம் க்ரூஸ்.

  இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான டாப் கன் மேவரிக் திரைப்படமும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

  விஜே மகேஸ்வரி தம் அடிப்பாரா? ஸ்மோக்கிங் ரூமில் வசமாக சிக்கினார்!விஜே மகேஸ்வரி தம் அடிப்பாரா? ஸ்மோக்கிங் ரூமில் வசமாக சிக்கினார்!

  நினைத்ததை முடிப்பவன்

  நினைத்ததை முடிப்பவன்

  அசாத்தியமான காரியங்களை சாத்தியப்படுத்திக் காட்டுவதில் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஒரு மிகப்பெரிய எக்ஸ்பெர்ட் என்றே சொல்லலாம். ஜேம்ஸ் பாண்ட் படங்களையே மிஞ்சும் அளவுக்கு மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களை எடுத்து உலக ரசிகர்களை தனது ரசிகர்களாக மாற்றிக் காட்டினார் டாம் க்ரூஸ். நிஜ விமானத்தில் தொங்கியபடியே ஷூட்டிங் செய்தது, ஹெலிகாப்டரை தாறுமாறாக ஓட்டியபடி ஷூட்டிங், மிக உயரமான இடத்தில் இருந்து பைக் சாகசம் என பல ஸ்டன்ட் காட்சிகளை டூப் போடாமல் நடித்து உடலில் ஏகப்பட்ட காயங்களை மெடலாக வாங்கியவர் டாம் க்ரூஸ்.

  அடுத்து விண்வெளி

  அடுத்து விண்வெளி

  ரிஸ்க் எடுப்பது எல்லாம் தனக்கு ரஸ்க் சாப்பிடுவது என்கிற பாணியில் நடித்து வரும் டாம் க்ரூஸ் தனது அடுத்த படத்திற்காக பூமியில் எல்லாம் ஷூட்டிங் செய்ய இடமே இல்லை அப்படியே ராக்கெட் எடுத்துக்கிட்டு ஸ்பேஸ் ஸ்டேஷன் வரை சென்று படம் எடுக்கலாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டார். யூனிவர்ஸல் ஃபிலிம் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சேர்மேன் டோனா லாங்லி அதுதொடர்பான ஹாட் அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார்.

  எல்லாம் ரெடி

  எல்லாம் ரெடி

  நாசாவுடன் இணைந்து முதலில் இந்த திட்டத்தை செய்யவுள்ளதாக 2020ல் அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அதன் பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படக்குழு விண்வெளிக்கு பறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இன்னும் பெயரிடாத இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் விண்வெளியில் நடத்த படக்குழு மற்றும் டாம் க்ரூஸ் ரெடியாகி விட்டனராம்.

  ரஷ்ய படம்

  ரஷ்ய படம்

  ஏற்கனவே தி சேலஞ்ச் படத்துக்காக ரஷ்ய நடிகை யுலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் அவர்களின் உதவிக்காக விண்வெளி வீரர் அன்டன் ஷகாப்லெரோவ் ஆகியோர் கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் நகரில் இருந்து 'சோயுஸ் எம்.எஸ்-19' விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே 12 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி பூமிக்கு திரும்பினர். இந்நிலையில், டாம் க்ரூஸ் விரைவில் விண்வெளிக்கு செல்ல உள்ளார்.

  ஸ்பேஸ் வாக்

  ஸ்பேஸ் வாக்

  ஸ்பேஸ் ஸ்டேஷனில் மட்டுமே அந்த படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்திய நிலையில், உலக வரலாற்றிலேயே முதல் முறையாக டாம் க்ரூஸ் ஸ்பேஸ் வாக் செய்யப் போகும் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக லாங்லி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஹாட் அப்டேட் கொடுத்துள்ளார்.

  English summary
  Popular Hollywood hero Tom Cruise upcoming movie team plans to shoot at Space soon. Universal Films Entertainment Chairman Langley confirmed the update recently in an exclusive interview.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X