»   »  ஏர்பஸ்ஸில் தொங்கியபடி நடித்தபோது எல்லாமே பிதுங்கிப் போன மாதிரி பீலிங்... டாம் குரூஸ்!

ஏர்பஸ்ஸில் தொங்கியபடி நடித்தபோது எல்லாமே பிதுங்கிப் போன மாதிரி பீலிங்... டாம் குரூஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டாம் க்ரூஸ் ரொம்பவே சிலாகித்துப் போய்ப் பேசுகிறார் தனது மிஷன் இம்பாசிபிள் 5 படத்தின் ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து.

இப்படத்தில் க்ரூஸ் போட்ட சண்டைகள் குறித்துத்தான் இப்போது பலரும் பேசி வருகிறார்கள். குறிப்பாக, படத்தின் டிரெய்லர் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.

அதில் குரூஸ் போட்டுள்ள சண்டைகள் குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

ஹையோ ஹையோ:

ஹையோ ஹையோ:

ஆனால் டாம் க்ரூஸோ, எனக்குத்தானே தெரியும் அந்த சமயத்தில் நான் சந்தித்த சங்கடங்கள் குறித்து என்று சிரிக்கிறார்.

ஏர்பஸ் விமானம்:

ஏர்பஸ் விமானம்:

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஏர்பஸ் விமானத்தில் வெளியில் தொங்கியபடி போட்ட சண்டைக் காட்சி மறக்க முடியாது. அந்தக் காட்சியின்போது விமானம் தரையிலிருந்து 5000 அடி உயரத்தில் இருந்தது.

கிட்டதட்ட 8 டேக்:

கிட்டதட்ட 8 டேக்:

அக்காட்சியின்போது மொத்தம் 8 டேக் வாங்க விட்டேன். பலத்த காற்று, பதட்டம், பீதி என எல்லாமே கலந்த உணர்வில் இருந்தேன். இருந்தாலும் தைரியத்தை விட்டு விடாமல் சண்டைக் காட்சியில் நடித்தேன்.

மோதிய ஏதோ ஒன்று:

மோதிய ஏதோ ஒன்று:

2வது டேக்கில் நடித்தபோது என் மீது ஏதோ பலமாக மோதுவது போல உணர்ந்தேன். பெரிய சம்பவமாக அது இல்லை. இருந்தாலும் எனது விலா எலும்புகள் நொறுங்கியது போல உணர்ந்தேன்.

உடம்பே உடையும் நிலை:

உடம்பே உடையும் நிலை:

ஒரு கட்டத்தில் என்னுடைய உடம்பிலிருந்து எல்லாமே பிதுங்க வந்து விடும் போல உணர்ந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் குரூஸ்.

தொங்கியபடி சண்டை:

தொங்கியபடி சண்டை:

குரூஸ் இப்படி பயங்கரமாக சண்டை போடுவது புதிதல்ல. ஏற்கனவே 2011ம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள் - கோஸ்ட் புரோட்டோகால் படத்திலும் கூட துபாயின் புர்ஜ் கலீபா கட்டடத்தின் மீது தொங்கியபடி சண்டை போட்டு அதிர வைத்தவர் அவர்.

English summary
Tom Cruise hung off the side of an airplane a death-defying eight times for the most memorable stunt in the upcoming “Mission: Impossible – Rogue Nation,” the actor revealed to theater owners Tuesday at CinemaCon.
Please Wait while comments are loading...