Top Gun: Maverick and Mission Impossible 7 : இந்த ஆண்டு ரிலீஸ் இல்லை... கவலையில் ரசிகர்கள்!

லண்டன் : டாம் குரூஸின் டாப் கன்: மேவரிக் மற்றும் மிஷன் இம்பாசிபிள் 7 ஆகிய படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக வியாகாம் சிபிஎஸ்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

டாப் கன்: மேவரிக் மே 2022 இல் வெளியிடப்படும் என்றும் மிஷன் இம்பாசிபிள் 7, 2022 செப்டம்பர் 30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mission Impossible 7

Mission Impossible 7

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் மிஷன் இம்பாசிபிள். இப்பட வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. 2018ஆம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள்: ஃபால்அவுட், திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்தை கிறிஸ்டோபர் மெக்குயரியிடமே அடுத்த இரண்டு பாகங்களை இயக்கும் பொறுப்பை பாராமவுண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

படப்பிடிப்பு தள்ளிவைப்பு

படப்பிடிப்பு தள்ளிவைப்பு

கரோனா நெருக்கடியால் குறிப்பிட்ட தேதிக்குள் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் பலமுறை படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்கான அனுமதி கிடைத்த நிலையில், லண்டனில் ஆளில்லாத பழைய விமான தளத்தில் ஒரு தனி கிராமத்தையே உருவாக்கி, படப்பிடிப்பு நடந்தது. இதில் படக்குழுவினரின் பாதுகாப்புக்காகப் பல லட்சம் டாலர்களைச் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டுவெளியாக இருந்தது

இந்த ஆண்டுவெளியாக இருந்தது

இதையடுத்து, 2020, 21ஆம் ஆண்டுக்குள் மிஷன் இம்பாசிபிள், அடுத்த இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் முடித்து 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி 7ஆம் பாகத்தையும், 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி எட்டாம் பாகத்தையும் வெளியிட பாராமவுண்ட் நிறுவனம் முடிவு செய்திருந்தது.

அடுத்த ஆண்டு வெளியாகும்

அடுத்த ஆண்டு வெளியாகும்

இந்நிலையில், டாம் குரூஸின் Top Gun: Maverick, Mission Impossible 7 ஆகிய படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துவருவதை அடுத்து படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக ViacomCBS செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், டாப் கன்: மேவரிக் (Top Gun: Maverick) 2022 அடுத்த ஆண்டு மே 27ந் தேதி வெளியிடப்படும் என்றும், மிஷன் இம்பாசிபிள் 7 (Mission Impossible 7) 2022 செப்டம்பர் 30 வரை வெளியாகும் என்றும் ராய்ட்டர்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் கன்: மேவரிக்

டாப் கன்: மேவரிக்

டாப் கன்: மேவரிக் 1986 ஆம் ஆண்டு டாம் குரூஸின் அதிரடி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும், இதில் அமெரிக்க கடற்படை விமானி பீட் மிட்செல் நடிக்கிறார். இந்த படத்தில் வால் கில்மர், மைல்ஸ் டெல்லர் மற்றும் ஜெனிபர் கோனெல்லி ஆகியோரும் நடிக்கிறார்கள். முன்னதாக இது நவம்பர் 19 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது மே 27 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தியேட்டர் ஆப்ரேட்டர்ஸ் கவலை

தியேட்டர் ஆப்ரேட்டர்ஸ் கவலை

தியேட்டர் ஆபரேட்டர்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய பட்ஜெட் படங்களான இந்த இரு படங்களையே நம்பி இருந்தனர். தற்போது வெளியாகி உள்ள இந்த அறிவிப்பால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸின் தாக்கல் அதிகரித்துள்ளது மேலும் கவலையை ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல படங்களில் ஓடிடி

பல படங்களில் ஓடிடி

மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றான வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ், 2021 ஆம் ஆண்டு அனைத்து திரைப்படங்களும் ஒரே நேரத்தில் OTT மற்றும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X