»   »  நள்ளிரவில் வந்து பலாத்காரம் செய்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை பரபர புகார்

நள்ளிரவில் வந்து பலாத்காரம் செய்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை பரபர புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாடலும், நடிகையுமான நடாசியா மால்தே தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பட வாய்ப்பு தேடி வந்த நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து மாடலும், ஹாலிவுட் நடிகையுமான நடாசியா மால்தே கூறியதாவது,

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

ஹார்வி குறித்து இன்று பேச தயக்கமாக இருந்தது. சொல்லப் போனால் பயமாக இருந்தது. என் நெருங்கிய நண்பர்கள் தான் தைரியம் கொடுத்து பேசச் சொன்னார்கள்.

பெண்கள்

பெண்கள்

என் மூன்று வயது மகனுக்காக இன்று நான் தைரியமாக பேசுகிறேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும், நடத்த வேண்டும் என்பதை என் மகன் புரிந்து கொள்ள வேண்டும்.

விருது

விருது

2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி பாஃப்டா விருது விழாவுக்காக லண்டனில் இருந்தேன். எல்ஜி செய்தித் தொடர்பாளராக இருந்தேன். விருது முடிந்து நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு வெயின்ஸ்டீன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்தேன்.

ஹோட்டல்

ஹோட்டல்

இரவு என் ஹோட்டல் அறையை யாரோ ஓங்கித் தட்டும் சப்தம் கேட்டு பதறி எழுந்தேன். பார்த்தால் வெயின்ஸ்டீன் தான் போதையில் தட்டிக் கொண்டிருந்தார். நான் வெயின்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருக்கிறேன் என்று அந்த ஹோட்டலில் தங்கிய பிரபலங்கள் நினைத்து விடுவார்களே என பயந்து கதவை திறந்தேன்.

நடிகைகள்

நடிகைகள்

என் அறைக்குள் வந்ததும் அவர் தனது பேண்ட்டை கழற்றிவிட்டு பெட்டில் அமர்ந்தார். என்னுடன் உறவு வைத்ததால் தான் அந்த நடிகைகள் எல்லாம் பிரபலமானார்கள் என்று பல நடிகைகளின் பெயர்களை வெயின்ஸ்டீன் கூறினார்.

ஆணுறை

ஆணுறை

வெயின்ஸ்டீன் என்னை பலாத்காரம் செய்தார். ஆணுறை கூட அணியவில்லை. அவர் அந்த கொடூரத்தை செய்தபோது செத்த பிணம் போன்று நான் படுத்திருந்தேன் என்றார் நடாசியா.

English summary
Norwegian model-actress Natassia Malthe has accused Hollywood producer Harvey Weinstein of rape.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil