»   »  ஜுராசிக் வேர்ல்ட்: குட், சூப்பர், மோசம், முடியல- இது ட்விட்டர் விமர்சனம்

ஜுராசிக் வேர்ல்ட்: குட், சூப்பர், மோசம், முடியல- இது ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்ஸ் ஆபீஸை அடித்து துவைத்துக் கொண்டிருக்கும் ஹாலிவுட் படமான ஜுராசிக் வேர்ல்ட் படம் பற்றி ட்விட்டரில் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என தெரியுமா?

ஜுராசிக் பார்க் சீரியஸில் நான்காவது பாகமாக ரிலீஸாகியுள்ள படம் தான் ஜுராசிக் வேர்ல்ட். கொலின் டிரவரோவ் இயக்கத்தில் கிறிஸ் ப்ராட் ஹீரோவாக நடித்துள்ள படம் கடந்த 12ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் சூப்பர் என்று சிலரும், முடியல என்று சிலரும் தெரிவித்துள்ளனர்.

விமர்சனம் எல்லாம் கிடக்கின்றது என்று கூறி மக்கள் தியேட்டர்களில் அலைமோதி வருவதால் படம் கல்லா கட்டி வருகிறது. இந்நிலையில் படம் பற்றி ட்விட்டரில் என்ன பேசப்படுகிறது என்று பார்க்கலாம்.

சூப்பர்

ட்யூட் ஜுராசிக் வேர்ல்ட் படம் ரொம்ப நன்றாக உள்ளது என்று டவ் காமரூன் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அருமை

@NickJnRobinson #JurassicWorld படம் மிக அருமை. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என அடீல் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

என்ஜாய்

ஜுராசிக் வேர்ல்ட் படத்தை நேற்று மிகவும் ரசித்து பார்த்தேன். மீண்டும் குழந்தை ஆனது போன்று உணர்ந்தேன்!!! ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த படத்தின் நினைவு வந்தது என்று ஜானதன் ஸ்டூவர்ட் ட்வீட்டியுள்ளார்.

அதிருப்தி

ஜுராசிக் வேர்ல்ட் படம் அதிருப்தி அளித்துள்ளது. திரைக்கதையாளர்கள் க்ரேயான்ஸ் மற்றும் புத்தகங்களுக்கு கலர் அடிப்பதோடு நிறுத்தியிருக்க வேண்டும் என டேவிட் டனாகர் தெரிவித்துள்ளார்.

முடியாது

ஜுராசிக் வேர்ல்ட் படத்தை பார்த்த பிறகு ஏற்பட்ட அதிருப்தியை வார்த்தையால் கூற முடியாது என்று குமுறியுள்ளார் ஹான்னா பவல்.

மோசம்

ஜுராசிக் வேர்ல்ட் உண்மையாகவே பெரிய அதிருப்தி. இரண்டாவது படம் தான் மோசம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இது அதைவிட மோசம் என அமிருல் அமின் கூறியுள்ளார்.

English summary
Jurassic world has got mixed reviews in Twitter. While some consider the movie as good, some are really disappointed.
Please Wait while comments are loading...