twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த பிரச்சனை.. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்திற்கு வந்த சிக்கல்.. இந்த நாட்டில் படம் ரிலீஸ் ஆகாதாம்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஓரினச் சேர்க்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மார்வெல் படங்களில் தொடர்ந்து சில சூப்பர் ஹீரோக்களை ஓரினச்சேர்க்கையாளர்களாக உருவாக்கி வருகின்றனர்.

    ஆனால், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக சட்டம் இருப்பதால் அந்த நாடுகளில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டு வருகின்றன.

    எட்டர்னல்ஸ் படத்தைத் தொடர்ந்து "Doctor Strange in the Multiverse of Madness" படத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மார்வெல் உலகில் இணைந்த பேட்மேன் நடிகர்.. இடி கடவுளின் தோர் லவ் அண்ட் தண்டர் டீசர் எப்படி இருக்கு?மார்வெல் உலகில் இணைந்த பேட்மேன் நடிகர்.. இடி கடவுளின் தோர் லவ் அண்ட் தண்டர் டீசர் எப்படி இருக்கு?

    மார்வெலின் அடுத்த பிரம்மாண்டம்

    மார்வெலின் அடுத்த பிரம்மாண்டம்

    ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம் மூலம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை உலகளவில் வாரிக் குவித்த மார்வெல் தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் படத்தை வரும் மே 6ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு எழுந்துள்ளது.

    டிக்கெட் புக்கிங் துவக்கம்

    டிக்கெட் புக்கிங் துவக்கம்

    சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அதிகாலை 4 மணி காட்சிக்கான டிக்கெட் புக்கிங் தற்போது துவங்கி உள்ளதாக அதன் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு முன்னதாகவே ஒரு ஹாலிவுட் படத்திற்கு தமிழ்நாட்டில் இப்பவே புக்கிங் ஆரம்பிக்கும் அளவுக்கு அத்தனை பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு எழுந்துள்ளது.

    வசூல் வேட்டை தான்

    வசூல் வேட்டை தான்

    வலிமை, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் என கோலிவுட் படங்கள் மூலமாகவும் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 போன்ற பிற மாநில படங்கள் மூலமாகவும் தமிழ்நாடு திரையரங்குகள் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அடுத்ததாக மார்வெல் திரைப்படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் வெளியானால் இன்னமும் வசூல் வேட்டை தான்.

    சவுதி அரேபியாவில் தடை

    சவுதி அரேபியாவில் தடை

    ஆனால், இந்த வசூல் எல்லாம் எங்களுக்குத் தேவையில்லை என்றும் எங்களின் கொள்கைகளில் உறுதியாக நிற்போம் என சவுதி அரேபியா அரசு இந்த படத்தின் வெளியீட்டுக்கு தற்போது தடை விதித்துள்ளது. சவுதி அரேபியா அரசின் தணிக்கை குழுவுக்கு படம் தணிக்கைக்கு சென்ற நிலையில், 'கே' சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் இருப்பதால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது. இதனால், சவுதி அரேபியா மட்டுமின்றி அரபு நாடுகளில் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை.

    ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரம்

    ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரம்

    இயக்குநர் சாம் ரைமி இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பெனடிக்ட் கம்பர்பேட்ச் நடிப்பில் உருவாகி உள்ள டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் படத்தில் இடம்பெற்றுள்ள புதிய சூப்பர் ஹீரோவான அமெரிக்கா சாவேஸ் ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரம் என்பதால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் Xochitl Gomez நடித்துள்ளார்.

    English summary
    Saudi Arabia Bans Marvel’s upcoming Magnum Opus movie 'Doctor Strange in the Multiverse of Madness’ due to Gay Super hero character.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X