»   »  'எப்போ பார்த்தாலும் இதே கேள்வியாப்பா... - அலுத்துக்கொண்ட நடிகை!

'எப்போ பார்த்தாலும் இதே கேள்வியாப்பா... - அலுத்துக்கொண்ட நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என தொலைக்காட்சி சேனல்களின் மூலம் பிரபலமானவர் ப்ரியா பவானி ஷங்கர். 'இப்போது 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகியிருக்கிறார். ரத்னகுமார் இயக்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார்.

'மேயாத மான்' படத்தில் இவர் வைபவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் சற்றுமுன்பு ஃபேஸ்புக் லைவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்குப் புன்னகையோடு பதிலளித்தார்.

Why you guys always ask this question?: Priya

அதில் ரசிகர் ஒருவர் 'விஜய், அஜித் இருவருமே ஒரே நேரத்தில் உங்களை ஹீரோயினாக நடிக்க அழைக்கிறார்கள்... யாருக்கு ஓகே சொல்வீர்கள்' என்று கேட்டார். அதற்கு ப்ரியா 'அடப் போங்கப்பா... எப்போ பார்த்தாலும் இந்த கேள்வியையே கேட்கிறீங்க, நான் இதற்கு பதில் சொல்ல மாட்டேன்' எனக் குறும்பாக பதில் அளித்தார்.

Why you guys always ask this question?: Priya

உங்களுக்கு ரோல்மாடல் யார் எனும் கேள்விக்கு சுவலெட்சுமிதான் தனது ரோல்மாடல் எனக் கூறினார். 'க்ளாமராக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. என்னைத் தமிழ் ரசிகர்களுக்கு எப்படிப் பார்த்தா பிடிக்குமோ அப்படியேதான் நடிப்பேன். சுவலெட்சுமியும் அதே மாதிரிதான் நடிச்சாங்க. அதனால் சுவலெட்சுமி தான் எனது ரோல்மாடல்' என கூறினார். இதை தொடர்ந்து ப்ரியா, ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் கூறி வந்தார்.

English summary
'Meyadha maan' actress priya bhavani shankar politely answered fans questions in facebook live.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil