twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் மேடையில் ஆத்திரத்தில் அறைந்த வில் ஸ்மித்.. இப்படியொரு தண்டனையை கொடுத்த அகாடமி!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆத்திரம் அழிவைத் தரும் என்பதற்கு உதாரணமாக மாறிவிட்டார் நடிகர் வில் ஸ்மித்.

    இத்தனை ஆண்டுகள் போராடி இரு முறை ஆஸ்கர் நாமினியாக மாறி விருது கிடைக்காமல் இருந்த நிலையில், கிங் ரிச்சர்ட் படத்திற்காக இந்த ஆண்டு வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

    பிக்பாஸ் அல்டிமேட் ஃபைனலிஸ்ட் ஆன 3 பேர்... டைட்டிலை வெல்லப் போவது யார்? பிக்பாஸ் அல்டிமேட் ஃபைனலிஸ்ட் ஆன 3 பேர்... டைட்டிலை வெல்லப் போவது யார்?

    ஆனால், அந்த சந்தோஷத்தை கொண்டாட முடியாத அளவுக்கு அவரது செயல் அவருக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது.

    ஆஸ்கர் அறை

    ஆஸ்கர் அறை

    94வது ஆஸ்கர் விருது விழா மேடையில் தனது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து காமெடி நடிகர் கிறிஸ் ராக் அடித்த கமெண்ட்டால் கடுப்பான வில் ஸ்மித், மேடை ஏறி அவரை அடித்து விட்டு வந்தது மிகப்பெரிய அதிர்வலையை உலகளவில் ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் வில் ஸ்மித் செய்த செயல் சரியானது என கொண்டாடிய பலரும், அதன் பிறகு வில் ஸ்மித் ஆத்திரப்பட்டு அடித்தது தவறான செயல் என ட்ரோல் பண்ண தொடங்கினர்.

    கிறிஸ் ராக் சாமர்த்தியம்

    கிறிஸ் ராக் சாமர்த்தியம்

    வில் ஸ்மித் ஆத்திரத்தில் அடித்த போதும், அமைதியாக சிரித்துக் கொண்டு கிறிஸ் ராக் நடந்து கொண்டதால், அவர் இந்த அளவுக்கு பிரச்சனையில் சிக்காமல் தப்பித்துக் கொண்டார். வில் ஸ்மித் அடித்தவுடன் அவரும் பதிலுக்கு ஆத்திரப்பட்டு அடித்திருந்தாலோ அவரை கெட்ட வார்த்தையால் திட்டி இருந்தாலோ அவருக்கும் சிக்கல் ஏற்பட்டு இருக்கும்.

    விலகிய வில் ஸ்மித்

    விலகிய வில் ஸ்மித்

    ஆஸ்கர் விருதுகளை வழங்கி வரும் அகாடமியில் இருந்து விலகுவதாக நடிகர் வில் ஸ்மித் அதிரடியாக அறிவித்தார். ஆஸ்கர் மேடையிலேயே சிறந்த நடிகருக்காக விருது வாங்கிய போதும், தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரினார். ஆனால், வில் ஸ்மித்தை மன்னிக்காமல் அவருக்கு அகாடமி மிகப்பெரிய தண்டனையை விதித்துள்ளது.

    10 ஆண்டுகளுக்கு தடை

    10 ஆண்டுகளுக்கு தடை

    ஆஸ்கர் விருது விழாக்களில் இனி 10 ஆண்டுகளுக்கு நடிகர் வில் ஸ்மித் பங்கேற்க முடியாது. அது மட்டுமின்றி அகாடமி சார்பாக நடத்தப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் நேரடியாகவோ விர்ச்சுவலாகவோ பங்கேற்க கூடாது என அகாடமியை சேர்ந்த நாட்டாமைகள் ஒன்று கூடி வில் ஸ்மித்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போல தண்டனை கொடுத்துள்ளனர்.

    ஆஸ்கர் பறிக்கப்படுமா

    ஆஸ்கர் பறிக்கப்படுமா

    பாலியல் புகாரில் சிக்கிய தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனின் ஆஸ்கர் விருது பறிக்கப்பட்டது போல வில் ஸ்மித்தின் ஆஸ்கர் விருதையும் திரும்ப பெற வேண்டும் என சிலர் அகாடமிக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால், சிறந்த நடிப்புக்காக வில் ஸ்மித் வாங்கிய விருதை பறிப்பது உரிய செயல் அல்ல என்றும் இந்த தண்டனை அவருக்கு சரியானதாக இருக்கும் என்றும், 10 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் ஆஸ்கரில் பங்கேற்க விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Oscar Winner Will Smith banned for 10 years by the Academy after his Oscars slap on Chris Rock shocks the world.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X