twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் தப்பு பண்ணிட்டேன்...கிரிசிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட ஸ்மித்

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆஸ்கார் விழாவில் அனைவரின் முன்னிலையிலும் மேடையில் வைத்து கிரிஸ் நாக்கை முகத்தில் குத்திய வில் ஸ்மித், சோஷியல் மீடியா மூலம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று ஆஸ்கார் அமைப்பிடமும் ஸ்மித் மன்னிப்பு கேட்டிருந்தார்.

    94வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றார். ஆனால் விருதை வாங்குவதற்கு முன்பே, கோபத்தால் அவர் செய்த செயல் விழாவில் கலந்து கொண்டவர்கள், விழாவை நேரடியாக பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

    பா.ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பு… டைட்டிலே வித்தியாசமா இருக்கே?பா.ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பு… டைட்டிலே வித்தியாசமா இருக்கே?

    பளார் விட்ட நடிகர்

    பளார் விட்ட நடிகர்

    காமெடி நடிகரான கிரிஸ் ராக், சிறந்த டாக்குமென்ட்ரி படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட போது, ஸ்மித்தின் மனைவி மொட்டை தலையுடன் இருப்பதை, 1997 ம் ஆண்டு வெளியான G.I.Jane படத்தில் வரும் Demi Moore போல் இருப்பதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்மித், மேடைக்கு வந்து கிரிஸ் முகத்தில் குத்தியதுடன், தனது இருக்கையில் வந்து அமர்ந்த பிறகும், என் மனைவி பற்றி பேச கூடாது என கத்தினார்.

    நோயால் பாதிக்கப்பட்ட ஜடா

    நோயால் பாதிக்கப்பட்ட ஜடா

    1997 ம் ஆண்டு ஸ்மித்தும், ஜடா பிங்கிட்டும் திருமணம் செய்து கொண்டனர். 2018 ம் ஆண்டு ஜடா பிங்கெட் ஸ்மித், தான் Alopecia என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டிறியப்பட்டுள்ளதாக அறிவித்தார். தான் தற்போது எவ்வாறு நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் ஓப்பனாக கூறி இருந்தார். Alopecia நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை முடி அதிக அளவில் உதிர்ந்து, மொட்டையாகும் நிலை ஏற்படும்.

    குத்தியதற்கு இது தான் காரணமா

    குத்தியதற்கு இது தான் காரணமா

    2021 ம் மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோ ஒன்றையும் ஸ்மித்தின் மனைவி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதோடு, எனக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறதா அல்லது வேறு ஏதாவதுமா என யாரும் நினைத்து விட வேண்டாம். நானும், இந்த alopecia நோயும் நண்பர்களான காலம் இது என குறிப்பிட்டிருந்தார். இது தெரிந்தும் அவரது உருவத்தை கேலி செய்யும் விதமாக கிரிஸ் பேசியதே ஸ்மித்திற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புகார் கொடுக்க மறுப்பு

    புகார் கொடுக்க மறுப்பு

    ஸ்மித் தன்னை தாக்கியதற்காக போலீசில் புகார் கொடுக்க கிரிஸ் மறுத்துவிட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாரும் பாதிக்கப்பட்டவரை புகார் அளிக்க மறுப்பதால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என சொல்லி விட்டனர். ஒருவேளை இனிமேல் அவர் புகார் கொடுத்தால் அது பற்றி முழுமையாக விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்காரிடம் மன்னிப்பு

    ஆஸ்காரிடம் மன்னிப்பு

    விருதை பெற்ற பிறகு உணர்ச்சிகரமாக பேசிய ஸ்மித் தன்னுடைய செயலுக்காக ஆஸ்கார் அமைப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அகாடமியிடமும், மற்ற சக நடிகர், நடிகைகள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இது அழகான தருணம். விருது வாங்கியதற்காக நான் அழவில்லை. இது வெறும் எனக்கான விருதல்ல. இது அனைத்து மக்கள் மீதான ஒளியாகும் என்றார்.

    கிரிசிடமும் மன்னிப்பு

    கிரிசிடமும் மன்னிப்பு

    விழாவில் தான் நடந்து கொண்ட விதம் குறித்தும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், கிரிஸ் உன்னிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன். நான் எனது கட்டுப்பாட்டில் இல்லை. நான் தவறு செய்து விட்டேன். எனது செயலுக்காக நான் வெட்கப்படுகிறேன். வன்முறை விஷயம் போன்று, அழிவுகரமானது. நேற்று இரவு அகாடமி விருது வழங்கும் விழாவில் நான் நடந்து கொண்டது ஏற்றுக் கொள்ள முடியாதது. மன்னிக்க முடியாதது. ஜோக் நமது வேலையில் ஒரு பகுதி. ஆனால் ஜடாவின் உடல்நிலை பற்றிய ஜோக் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உணர்ச்சிவசப்பட்டு அப்படி நடந்து கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Will Smith said in his public apology to Chris Rock that he was out of line and was embarrassed. The joke about Jada's medical condition was too much for him to bear and he reacted emotionally.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X