»   »  இந்தப் படங்களைப் பாத்திருக்கீங்களா...?

இந்தப் படங்களைப் பாத்திருக்கீங்களா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகில் இதுவரை எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன, அவ்வளவு படத்தையும் முழுதாகப் பார்க்க ஒரு வாழ்நாள் போதாது. முன்பெல்லாம் படங்கள் வெளியாகும் போது அந்தந்த மொழிகளில் உள்ள குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

உலகளவில் சந்தை விரிவடைந்த போது சினிமாவின் எல்லையும் விரிவடைந்தது இப்போது எல்லாம் நவீன தொழில் நுட்பங்களுடன் உலகமெங்கும் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின்றன.

இதனால் மற்ற மொழிகளில் வெளிவந்த சிறந்த திரைப் படங்களைக் காண ரசிகர்கள் பெரும்பாலும் ஆர்வம் கொண்டு திகழ்கின்றனர், சமயங்களில் மொழி புரியாவிடினும் படங்களில் ஒன்றிப் போய் முழுப் படத்தையும் பார்த்து அதனைப் பற்றிய விவாதங்களிலும் ஈடுபடுகின்றனர்.

நாளுக்குநாள் சினிமாவின் எல்லை விரிவடைந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் உலகளவில் சிறந்த 7 படங்களைப் பற்றி இங்கே காணலாம்.

படம் வெளிவந்த நேரம், திரைக்கதை, இயக்கம், நடிப்பு மற்றும் பிறபடங்களுக்கு முன்மாதிரியான படங்கள் என்ற வரிசையின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வகைபடுத்தப் படுகிறது.

காட்பாதர்

காட்பாதர்

1972 ம் ஆண்டு வெளிவந்த காட்பாதர் திரைப்படம் வெளிவந்து சுமார் 43 வருடங்களிற்குப் பின்னும் கூட உலகில் இன்றளவும் சிறந்த படங்களின் வரிசையில் முதலில் உள்ளது.

ஏன் அதற்குப் பிறகு ஹாலிவுட்டில் சிறந்த படங்களே வரவில்லையா என்று கேட்டால்? வந்தது ஆனால் அந்தப் படங்கள் அனைத்துமே காட்பாதரின் அருகில் கூட நிற்க முடியவில்லை.

அந்தளவிற்கு நேர்த்தியான திரைக்கதை, இயக்கம், காட்சியமைப்பு மற்றும் நடிப்பு எல்லாம் கச்சிதமாக அமைந்த கலவை இது.

உலகில் இதுவரை வெளிவந்த டான் படங்களிற்கு எல்லாம் தலைவன் காட்பாதர் தான் இதற்கு தமிழிலேயே சாட்சிகள் உள்ளன. .கார்த்தி நடித்து வெளிவந்த அமரன், கமலின் நடிப்பில் வெளிவந்த நாயகன் மற்றும் கமல் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் போன்ற படங்கள் காட்பாதர் படத்தின் தாக்கத்தில் உருவானவை தான்.

இதுவரை நீங்கள் இந்தப் படத்தை பார்க்கா விடினும் குற்றமில்லை இதைப் படித்த பின்னராவது படத்தைப் பாருங்கள் இல்லையெனில் வாழ்க்கையில் ஒரு நல்ல திரைப்படத்தை நீங்கள் தவற விடுகிறீர்கள் என்று அர்த்தமாகும்.

பாரஸ்ட் ஹம்ப்

பாரஸ்ட் ஹம்ப்

1994 ம் ஆண்டில் வெளிவந்த பாரஸ்ட் ஹம்ப் திரைப்படம் இன்றளவும் உலகின் தலைசிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகின்றது, அதிரடி சண்டைக் காட்சிகளோ அதிபுத்திசாலியான

நாயகனோ இல்லாத பாரஸ்ட் ஹம்ப் உலகெங்கும் வசூலில் வெற்றிக்கொடி நாட்டிய ஒரு திரைப்படம். வெறும் 55 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு சுமார் 680 மில்லியன்

டாலர்களை வசூலித்தது என்றால் படத்தின் வசூல் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு மனிதன் பேருந்து நிலையத்தில் இருக்கும் பெஞ்சு ஒன்றில் அமர்ந்து தனது கடந்த வாழ்க்கையை நினைவு கூர்ந்து சொல்ல ஆரம்பிக்கிறான். அருகில் யாரும் கேட்பது போல

தெரியவில்லை எனினும் அவன் தனது கதையை உரக்க சொல்லிக் கொண்டிருக்கிறான்.ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகரான டாம் கேங்ஸ் தனது இயல்பான நடிப்பால் படம் முழுவதும்

அசத்தியிருப்பார்.

முக்கியமாக படத்தின் பல காட்சிகளில் பலவிதமான குறியீடுகள் ஒளிந்திருப்பதைக் காணலாம். அமெரிக்காவின் வரலாறை நன்கறிந்தவர்கள் , அதனை கண்டுபிடிக்க இயலும்.

வாட்டர்கேட் ஊழல் , ஆப்பிள் நிறுவனத்தின் அசுரவளர்ச்சி, கென்னடி மன்றோ விவகாரம் , அதிபர்களின் தொடர்கொலைகள் , வியட்நாம் போர் , அமெரிக்க - சீன உடன்படிக்கை போன்று எண்ணற்ற விஷயங்களை படத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த படத்தைப்பற்றி எழுத்துகளால் வர்ணிக்கமுடியாது என்பதே உண்மை, பார்த்து மனதால் உணரக்கூடிய திரைப்படம் இது. இந்த படம் உங்களை சிரிக்கவைக்கும், அழவைக்கும்.

வலியில் ஆழ்த்தும், சந்தோஷமானதொரு உணர்வினைக்கொடுக்கும். பார்த்து முடித்ததும், இவரைப்போல் நாமும் இருக்கவேண்டும் என்று ஒருமுறையாவது உங்களை நினைக்கச் செய்யும்.

6 ஆஸ்கார் விருதுகளை வென்ற படமிது என்பது குறிப்பிடத்தக்கது.

த ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்

த ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்

எந்த ஒரு விளிம்பு நிலையிலும் மனிதன் நம்பிக்கயை மட்டும் இழக்க கூடாது என்பதை விளக்கும் படம் இது. மிகவும் மெதுவாக போகும் படம். கட்டை வண்டியில் பயணம் செய்வதை போன்று இருக்கும், ஆனால் இந்த பயணம் ஒரு மறக்கவே முடியாத அனுபவமாக நிச்சயம் இருக்கும். 21/2 மணி நீங்கள் பொறுமையாக பயணம் செய்தால் ஒரு நல்ல உணர்வை இந்தப் படம் உங்களுக்கு அளிக்கும் படத்தின் பலமே இதன் வசனங்கள் தான்.

படத்தின் கதை இதுதான் வாங்கி அதிகாரி ஒருவர் செய்யாத கொலைக் குற்றத்திற்காக தண்டனை பெற்று மிகவும் மோசமான ஒரு சிறைச்சாலைக்கு செல்கிறார். 19 வருடங்களை சிறையில் கழித்த பின்பு அவருக்கு கொலையாளி பற்றி தெரிய வருகிறது, வங்கி அதிகாரி உண்மையான கொலைகாரனை கண்டுபிடித்தாரா என்பதே கிளைமாக்ஸ்.

1994 ஆம் ஆண்டு,ஃப்ரான்க் டாரபான்ட் இயக்கத்தில் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஸ்டீபென் கிங்கின் "ரீட்டா ஹேவொர்த் அண்ட் ஷஷான்க் ரிடெம்ப்ஷன்" என்னும் அற்புதமான நாவலைத் தழுவி,வெளிவந்த "டிராமா" வகை உணர்ச்சி காவியம்.வாழ்வில் உத்வேகம் தரும் படங்களின் வரிசையில் இப்படத்துக்கே முதலிடம்.வல்லவன் வாழ்வான் என்பதை உரக்க சொன்ன படம் இது கண்டிப்பாக ஒருமுறை அனைவரும் பார்க்கலாம் இப்படத்தை.

தி டார்க் நைட்

தி டார்க் நைட்

இதுவரை வந்த பேட்மேன் படங்களில் அவ்வளவு ஏன் நோலன் படங்களிலேயே பயங்கர வேகமானதும், அட்டகாசமான விஷுவல்களும், அற்புதமான கேரக்டர்களையும் கொண்ட படம் என்றால் அது டார்க் நைட் தான்.

ஹாலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகிய கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் 2008 ம் ஆண்டு வெளிவந்த தி டார்க் நைட் திரைப்படம் உலகளவில் சூறாவளியாக மாறி வசூலில் புரட்சி ஏற்படுத்தியது.

படத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது தெரியுமா? கிறிஸ்டோபர் நோலனின் சகோதரரும், திரைக்கதை எழுதியவர்களில் ஒருவருமான ஜொனாதன் நோலன் இந்தப் படத்தை திரையில் பார்க்க ஆசைப்பட்டு தியேட்டருக்கு சென்றிருக்கிறார்.

அவர் அடுத்த காட்சிக்கு டிக்கெட் கேட்க கோபமான டிக்கெட் கொடுப்பவர் அமெரிக்காவுல இன்னும் 2 வாரத்திற்கு எல்லா தியேட்டர்களும் ஹவுஸ்புல் என்று கூறினாராம். என்றால் எந்த அளவுக்கு படத்திற்கு வரவேற்பு இருந்தது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

பார்க்க வேண்டிய படங்களில் தி டார்க் நைட் படத்திற்கும் கண்டிப்பாக ஒரு இடமுண்டு.

தி லார்ட்ஸ் ஆப் த ரிங்க்ஸ்

தி லார்ட்ஸ் ஆப் த ரிங்க்ஸ்

‘மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துக்கு எதிரான கதை' என்று சுருக்கமாக "லார்ட் ஆப் த ரிங்ஸ்"-ஐ சொல்லலாம். மூவுலகையும் ஆளும் சர்வ வல்லமையைத் தரக்கூடிய ஒரு மோதிரத்தை அழிப்பதற்காக, ஒரு குழு மேற்கொள்ளும் சாகஸப் பயணம்தான் மையச் கரு.அத்தனை சக்தியைத் தரும் ஒன்றை வைத்து நல்லதும் செய்யலாமே என்ற கேள்வி இயல்பாக நமக்கு எழலாம்.

ஆனால், சர்வ வல்லமைகளும் ஒரு ஆளிடம் குவிந்தால், அவன் எப்பேர்ப்பட்ட தர்மசீலனாக இருந்தாலும், அது அவனைத் தீமையின் பக்கமே சாய்க்கும் என்று இந்தக் கதை சொல்கிறது. அந்த வகையில் குறியீட்டுத் தளத்தில் அது உலக அரசியலை, சர்வாதிகாரத்தை, வல்லரசுகளை விமர்சிக்கிறது.

அதேசமயம் ‘மனித பலவீனத்தின் கதை' என்றும் சொல்லலாம். தீமை எப்போதும் கவர்ச்சிகரமாகவும் ஈர்ப்பதாகவும் இருப்பதனால், மனித மனம் அதன் பக்கமே நழுவிச்செல்ல எத்தனிக்கிறது என்பதை அழுத்தமாகக் காட்டுவதன்மூலம், தனிமனித ஒழுக்கத்தைப் பற்றிய ஒரு நீதிக் கதையாகவும் "லார்ட் ஆப் த ரிங்ஸ்" விளங்குகிறது.

மனிதனின் பேராசையும் அதிகார வேட்கையும் எப்படிப்பட்ட அழிவுகளை ஏற்படுத்தும் என்பதையும், எந்த வகையான சர்வாதிகாரமும் கேடானதே என்பதையும், தீமை வெளியிலெல்லாம் இல்லை அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளுமே இருக்கிறது என்பதையும், ஏராளமான கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் மூலம் லார்ட்ஸ் ஆப் த ரிங்க்ஸ் திரைப்படம் விளக்குகின்றது.

அடுத்தடுத்து மொத்தம் 3 பாகங்கள் என்று வெளிவந்த லார்ட்ஸ் ஆப் த ரிங்க்ஸ் வாழ்க்கையில் தவற விடக் கூடாத படங்களில் ஒன்று.

டைட்டானிக்

டைட்டானிக்

இந்தத் திரைப்படத்தைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை ஹாலிவுட்டின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997 ம் ஆண்டு வெளிவந்த டைட்டானிக், உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியனிற்கும் அதிகமான டாலர்களை வாரிக் குவித்தது.

படத்தை எடுக்க செய்த மொத்த செலவுமே 200 மில்லியன் டாலர்களில் அடங்கிவிட்டது, ஆனால் டைட்டானிக் படத்தை படமாக்குவதற்குள் ஜேம்ஸ் கேமரூன் பட்ட பாட்டை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மூழ்கும் கப்பலில் ஒரு ரோமியோ ஜூலியட் கதை" என்று ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பாளர்களிடம் சொல்ல அவர்களுக்கு உற்சாகம் வரவில்லை. கார் துரத்தல்கள், அட்டகாச வில்லன்கள் எல்லாம் இல்லாத காதல் கதையை, அதுவும் ஒரு கப்பல் விபத்தை மூன்று மணி நேரம் மக்கள் உட்கார்ந்து பார்ப்பார்களா என்ற சந்தேகம். இயக்குநரின் உந்துதலில் படம் ஆரம்பிக்கப்பட்டாலும் வெளியிடுவதில் தாமதங்கள், பட்ஜெட்டை மீறிய செலவு, ஒரு தோல்விப் படம் என்று கருதப்பட்டு வளர்ந்த படம்தான் டைட்டானிக்.

ஆனால் 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட 11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றது டைட்டானிக். இதுவரை அதிகமான ஆஸ்கர்களைக் குவித்த ‘பென்ஹர்' படத்துடன் அதே 11 விருதுகள் பெற்று சமன் செய்தது டைட்டானிக். அதே போல அந்தக் காலகட்டத்தில் உலகில் அதிக வசூல் என்கிற சாதனையையும் செய்தது. இந்த வசூலை முறியடித்த படம் ஜேம்ஸ் கேமரூன் பின்னர் எடுத்து வெளிவந்த அவதார்!

பல்ப் பிக்ஸன்

பல்ப் பிக்ஸன்

இந்த படம் ஒரு Non-Linear வகையானது. அதாவது ஒரு சூப்பர் திரில்லர் நாவல் படிப்பதை போன்ற ஒரு அனுபவத்தை உங்களுக்கு தரும். நாவலில் வருவதுபோல் படத்தை அத்தியாயம் (Chapter) வரியாக பிரித்து இருப்பார்கள். படத்தில் நான்கு கிளை கதைகள் , இந்த நான்கு கதைகளும் ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்டோ.. இல்லை பின்னிக்கொண்டோ இருக்கும். ஆனால் கடைசி வரை ஒட்டவே ஒட்டாது. படம் முடிந்த பிறகு நீங்கள் ரொம்ப நேரம் படத்தை பற்றி யோசித்து கொண்டு இருப்பீர்கள்.

இயக்குனரை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர் முழு நீள இயக்குனராக இயக்கிய ரிசர்வாயர் டாக்ஸ், பல்ப் பிக்ஸன் தொடங்கி அனைத்துமே சூப்பர் ஹிட் திரைப்படங்கள். இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் திரைக்கதை என்று சொல்லலாம். படம் முதல் காட்சியில் ஆரம்பித்து நகர்ந்து கொண்டிருக்கும், நமக்கே தெரியாமல் படத்தின் கடைசி காட்சியை , படத்தின் முதல் காட்சியில் கொண்டு வந்து முடித்திருப்பார் இயக்குனர். இந்த புதுமையான முயற்சிக்கு தான் இவ்வளவு வரவேற்பு.

வித்தியாசமான திரைக்கதையால் இன்றளவும் உலகின் சிறந்த படங்களில் ஒன்றாக திகழ்கிறது பல்ப் பிக்ஸன்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    World Best Movies of All Time - The Greatest Films Ever to Grace The Screen.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more