மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. எக்ஸ்மேன் நடிகர் ஹக் ஜேக்மனுக்கு கோவிட் பாசிட்டிவ்.. ரசிகர்கள் கவலை

லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா தடுப்பூசி எல்லாம் போட்டாச்சு இனிமேல் கொரோனா பயம் இருக்காது என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஓமிக்ரான் ஆக உருமாறி மீண்டும் கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

எக்ஸ்மேன் படத்தில் வால்வரின் ஆக நடித்து உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் ஹக் ஜேக்மன் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நம்ம ஊர் வடிவேலு முதல் ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மன் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மீண்டும் அதிகரிக்கும் கொரொனா

மீண்டும் அதிகரிக்கும் கொரொனா

உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றன. 2019ம் ஆண்டு ஆரம்பித்த கோவிட் 19 எனும் கொடிய நோய் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய வடிவுடன் உருமாறிக் கொண்டே வந்து ஏகப்பட்ட உயிர்களை காவு வாங்கி வருகிறது.

இப்போதான் மூச்சு விடுகின்றன

இப்போதான் மூச்சு விடுகின்றன

கொரோனா பரவல் காரணமாக முடக்கப்பட்ட தியேட்டர்கள் உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகத் தான் திறக்கப்பட்டு மூச்சு விட்டு வருகின்றன. ஏகப்பட்ட பிரம்மாண்ட படங்கள் அடுத்த ஆண்டு ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பது சினிமா துறையை கலங்க வைத்துள்ளது.

ஹக் ஜேக்மனுக்கு கொரோனா

ஹக் ஜேக்மனுக்கு கொரோனா

ஏற்கனவே புதிய பேட்மேன் நடிகர், டாம் க்ரூஸ் படக்குழுவினருக்கு கொரோனா என பல படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மன் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதி பட்டு வருகிறார். எக்ஸ்மேன் படங்களில் வால்வரினாக நடித்து மிரட்டியவர் ஹக் ஜேக்மேன். 53 வயதாகும் அவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி உள்ளது என வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

சீக்கிரம் வந்து விடுவேன்

சீக்கிரம் வந்து விடுவேன்

அந்த வீடியோவில் தனக்கு இருமல் மற்றும் சளி இருப்பதாகவும், தொண்டை கரகரப்பு ஏற்பட்டு குரல் மோசமடைந்து விட்டதாகவும், பெரிய பாதிப்பு ஒன்றும் தெரியவில்லை. நலமாக தான் உள்ளேன் விரைவில் பூரணமாக குணமடைந்து ரசிகர்களை சந்திக்க வந்து விடுவேன். அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் இருங்கள் என அறிவுறுத்தி உள்ளார்.

கேன்சலான நிகழ்ச்சி

கேன்சலான நிகழ்ச்சி

நியூ இயரை முன்னிட்டு ஹக் ஜேக்மன் பங்கு பெறவிருந்த மியூசிக்கல் மேன் எனும் இசை நிகழ்ச்சி அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹக் ஜேக்மன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X