»   »  வீடு புகுந்து பலாத்காரம் செய்தார், வேலையை கெடுத்தார்: காமக்கொடூர தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

வீடு புகுந்து பலாத்காரம் செய்தார், வேலையை கெடுத்தார்: காமக்கொடூர தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேலும் ஒரு ஹாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக பாலியல் புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. அவர் தங்களை பலாத்காரம் செய்ததாக இதுவரை 9 நடிகைகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகை அன்னபெல்லா சியோராவும் வெயின்ஸ்டீன் மீது புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

அத்துமீறல்

அத்துமீறல்

1992ம் ஆண்டு வெயின்ஸ்டீன் நியூயார்க்கில் உள்ள எனது அபார்ட்மென்ட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அவர் அப்போது என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

முடியவில்லை

முடியவில்லை

நான் அவரிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ போராடினேன். ஆனால் முடியவில்லை. அவர் கதவை தட்டியபோது ஏன் திறந்தோம் என்று நொந்து கொண்டேன்.

வெயின்ஸ்டீன்

வெயின்ஸ்டீன்

அதில் இருந்து அவர் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த சம்பவம் குறித்து நான் போலீசில் புகார் அளிக்கவில்லை. ஆனால் என் சினிமா வாழ்க்கை அவரால் பாதிக்கப்பட்டது.

வேலை

வேலை

1995ம் ஆண்டு வரை வேலை இல்லாமல் இருந்தேன். வாய்ப்பு கேட்டு எங்கு சென்றாலும் உங்களிடம் வேலை வாங்குவது கஷ்டம் என கேள்விப்பட்டோம் என்பார்கள். இது எல்லாம் வெயின்ஸ்டீனின் வேலை.

ஹோட்டல்

ஹோட்டல்

வெயின்ஸ்டீன் என்னை சும்மா விடவில்லை. 1997ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றிருந்தேன். அப்போது அவர் உள்ளாடை மட்டும் அணிந்து என் ஹோட்டல் அறைக்கு வந்தார் என்றார் அன்னபெல்லா.

English summary
Hollywood actress Annabella Sciorra accused producer Harvey Weinstein of raping her in her apartment in the year 1992.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X