»   »  இதைப் படிச்சுட்டு நீங்க வாந்தி எடுத்தா "கம்பெனி" பொறுப்பேற்காதுங்க!

இதைப் படிச்சுட்டு நீங்க வாந்தி எடுத்தா "கம்பெனி" பொறுப்பேற்காதுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் பிரபலங்கள் சிலரின் தனிப்பட்ட விஷயங்கள் சிலவை பற்றி தெரிந்தால் நிச்சயம் உங்களுக்கு குமட்டிக் கொண்டு வரும்.

ஹாலிவுட் பிரபலங்கள் என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது அவர்களின் ஜிம் பாடியும், சிவப்பு கம்பளத்தில் நடந்து வருவதும் தான். ஹாலிவுட் பிரபலங்கள் அத்தனை கோடிக்கு வீடு வாங்கினார்கள், இத்தனை கோடிக்கு தீவு வாங்கினார்கள் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகும்.

இந்நிலையில் சில ஹாலிவுட் பிரபலங்கள் பற்றிய முகம் சுளிக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிராட் பிட், ஏஞ்சலினா

பிராட் பிட், ஏஞ்சலினா

ஹாலிவுட்டின் பிரபலமான ஜோடியான பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜூலி 6 குழந்தைகளுக்கு பெற்றோர். அவர்களின் வீடு சுத்தமாகவே இருக்காதாம். எங்கு பார்த்தாலும் உணவுப் பொருட்களும், ஆடைகளும் சிதறிக் கிடக்குமாம். இதில் பிராட் பிட்டுக்கு படப்பிடிப்புகளின்போது பல நாட்களாக குளிக்காமல் இருக்கும் பழக்கம் வேறு உள்ளதாம்.

ராபர்ட்

ராபர்ட்

ட்வைலைட் படங்களில் நடித்துள்ள ராபர்ட் பேட்டின்சனுக்கு குளிக்க பிடிக்காதாம். அவராலேயே அவரது கப்பை தாங்க முடியாமல் போனால் தான் குளிப்பாராம். வீட்டையும் சுத்தமாக வைத்திருக்க மாட்டாராம்.

கேமரூன் டயஸ்

கேமரூன் டயஸ்

கேமரூன் டயஸ் பல நாட்களாக குளிக்காமல் ஊர் சுற்றுவாராம். குளிக்காவிட்டாலும் வாசனை திரவியங்களையும் பயன்படுத்தமாட்டாராம். இதனால் அம்மணியின் அருகில் சென்றால் கப்படிக்குமாம். அவர் ஒரு ஆடையை தொடர்ந்து 4 நாட்கள் அணிந்துவிட்டு அதை தூக்கிப் போட்டுவிடுவாராம்.

ஜானி டெப்

ஜானி டெப்

நடிகர் ஜானி டெப்புக்கு குளிக்கவே பிடிக்காதாம். கேட்டால் நான் பிசியாக இருக்கிறேன் குளிக்க நேரம் இல்லை என்று கூறி சமாளித்துவிடுகிறாராம். இதில் விந்தை என்னவென்றால் அவரது முன்னாள் மனைவி வெனேசா பாரடைஸுக்கும் குளிக்க பிடிக்காதாம்.

மெகன் ஃபாக்ஸ்

மெகன் ஃபாக்ஸ்

உலகின் கவர்ச்சியான பெண்ணாக தேர்வு செய்யப்பட்ட நடிகை மெகன் ஃபாக்ஸுக்கு சுத்தம் என்பதன் அர்த்தம் தெரியாதாம். வீட்டில் கழற்றிப்போட்ட துணியைக் கூட எடுத்து வேறு இடத்தில் போட மாட்டாராம். டாய்லெட்டுக்கு சென்றால் அதை ஃபிளஷ்ஷும் செய்வது இல்லை.

ஜூலியா ராபர்ட்ஸ்

ஜூலியா ராபர்ட்ஸ்

தண்ணீரை மிச்சப்படுத்த பல நாட்களுக்கு ஒரு முறை தான் குளிப்பாராம் ஜூலியா ராபர்ட்ஸ். ஜூலியா மீது வருமே ஒரு கப்பு, தாங்க முடியாது என்று அவரது முன்னாள் பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்னி ஸ்பியர்ஸ்

பிரிட்னி ஸ்பியர்ஸ்

பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆடையை அவிழ்த்து அதை தனது வீட்டு ஹாலில் தொங்கவிடுவாராம். படுக்கைக்கு அடியில் பாதி சாப்பிட்ட பர்கர், பீட்சா இருக்கும் என அவரது வீட்டு பணியாட்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்னிக்கும் குளிக்கப் பிடிக்காதாம்.

English summary
It is a myth that money can buy everything. Celebrities have loads of money, but that doesn't define their personal habits. No matter how beautiful they look, these Hollywood celebrities with poor hygiene reek so much, that you can't bear the odor coming from their body.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil