»   »  இத்ரிஸ் கையில் துப்பாக்கியைக் கொடுங்க.. அவர்தான் செம "பாண்ட்"... குரல் கொடுக்கும் ஜோ!

இத்ரிஸ் கையில் துப்பாக்கியைக் கொடுங்க.. அவர்தான் செம "பாண்ட்"... குரல் கொடுக்கும் ஜோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஜேம்ஸ் பாண்ட் வேடத்திற்கு மிகப் பொருத்தமானவர் நடிகர் இத்ரிஸ் எல்பாதான். அவருக்கே அந்த வேடம் பொருத்தமாக இருக்கும். எனவே அவரையே அடுத்த ஜேம்ஸ் பாண்ட்டாக அறிவிக்க வேண்டும் என்று நடிகை ஜோ சல்தானா கூறியுள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் தற்போது நடித்து வரும் டேணியல் கிரேக் இனிமேல் ஜேம்ஸ் வேடத்தில் நடிக்கப் போவதில்லை. எனவே புதிய பாண்ட் நடிகரைத் தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளது பாண்ட் படத் தயாரிப்புக் குழு.

அடுத்த பாண்ட் யாராக இருக்கலாம் என்று உலகம் முழுவதும் வாதங்கள் சூடு பிடித்துள்ளன. அடுத்த பாண்ட் இவராக இருக்கலாம் என்று சிலரின் பெயர்கள் அதில் அடிபடுகின்றன.

ஜோ சல்தானா ஆதரவு

ஜோ சல்தானா ஆதரவு

ஜேம்ஸ் வேடத்தில் நடிப்பதற்குப் பொருத்தமானவர் என்று கூறப்படும் நடிகர்களில் முக்கியமானவர் இத்ரிஸ் எல்பா. இவருக்கு ஆதரவாக தற்போது நடிகை ஜோ சல்தானா குரல் கொடுத்துள்ளார்.

செக்ஸி

செக்ஸி

இதுகுறித்து ஜோ கூறுகையில் மிகவும் செக்ஸியான ஆண்களில் இத்ரிஸுக்கு தனி இடம் உண்டு. அவருக்கு ஜேம்ஸ் பாண்ட் வேடம் மிகப் பொருத்தமாக இருக்கும். நிச்சயம் அவர் ஜொலிப்பார்.

என் கணவருக்கும் பிடிக்கும்

என் கணவருக்கும் பிடிக்கும்

இத்ரிஸ் எல்பாவை எனக்கு மட்டுமல்ல எல்லாப் பெண்களுக்குமே பிடிக்கும். ஏன் என் கணவருக்கும் கூட இத்ரிஸை மிகவும் பிடிக்கும். அந்த அளவுக்கு இந்த வேடத்துக்குப் பொருத்தமானவர் இத்ரிஸ்.

முன்னாடியே வந்திருக்க வேண்டும்

முன்னாடியே வந்திருக்க வேண்டும்

என்னைக் கேட்டால் எப்போதோ அவரை பாண்ட் வேடத்தில் நடிக்க வைத்திருக்க வேண்டும். ஆனால் ஏன் இவ்வளவு தாமதம் என்றுதான் தெரியவில்லை. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்.

என் கணவர் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்

என் கணவர் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்

அவர்தான் இருக்கும் ஆண்களிலேயே செக்ஸியானவர் என்று கூறுவேன். எங்கு வந்தும் இதைக் கூறத் தயார். இதைக் கேட்டு எனது கணவர் நிச்சயம் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார். காரணம், உண்மை அதுதான் என்று கூறியுள்ளார் ஜோ.

English summary
Actress Zoe Saldana has said that hunky Idris Elba is the perfect choice to be the next Bond.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil