For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'டு நாட் டிஸ்டர்ப்' சுஷ்மிதா!

  By Staff
  |
  Sushmita Sen
  மறுபடியும் வருகிறார் சுஷ்மிதா. 2007ம் ஆண்டோடு சுஷ்மிதாவைத் திரையில் பார்க்க முடியவில்லை. ராம் கோபால் வர்மாவின் அட்டர் பிளாப் படமான ஆஜ்-தான் சுஷ்மிதா கடைசியாக ரசிகர்களை சந்தித்த படம்.

  அந்தப் படத்திற்குப் பின்னர் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ரசிகர்களின் தரிசனத்திற்காக வருகிறார் சுஷ்மிதா - டு நாட் டிஸ்டர்ப் மூலம்.

  டேவிட் தவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சுஷ்மிதா தவிர லாரா தத்தா இன்னொரு நாயகி. இவர்களுடன் கோவிந்தா, ரிதேஷ் தேஷ்முக் ஆகியோரும் உள்ளனர். டேவிட் தவன் என்றாலே நக்கலும், நையாண்டியும், காமெடியும் தலை விரித்தாடும். கூடவே கோவிந்தாவும் இருப்பதால் படம் முழுக்க பளீர் சிரிப்புக்குப் பஞ்சமே இல்லையாம்.

  இவர்களை விடுவோம், சுஷ்மிதாவிடம் போவோம்.

  ஏன் இவ்ளோ லேட் சுஷ்மிதா?

  2 வருடமாக வேறு படத்தில் நடிக்காமல் இருந்ததால் எனக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை. நிறைய பொறுமையைக் கற்றுக் கொண்டேன். எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. இந்தப் படத்தை முடிக்க சற்று தாமதமாகி விட்டது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். அடுத்து துல்ஹா மில் கயா படத்தில் என்னைப் பார்க்கலாம்.

  டு நாட் டிஸ்டர்ப் திருமணம் குறித்த படம். இப்படத்தில் நான் மனைவியாக நடிக்கிறேன். எனது கணவர் கோவிந்தா. ஜொள்ளு பார்ட்டியாக வருகிறார்.

  இது டேவிட் தவன் படம். கூடவே கோவிந்தாவும். கேட்கவா வேண்டும். அதிலும் சி சி-உடன் (அதாங்க கோவிந்தாவோட செல்லப் பெயர்) நடித்தது ரொம்பப் பெருமையாக உள்ளது.

  மனிதர் சும்மாவே இருக்க மாட்டார். அவர் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு கொஞ்சமும் குறைவிருக்காது. படு ஜாலியான நபர். படத்தில் அப்படி ஒரு டான்ஸ் ஆடியிருக்கிறார். 25 வருடமாக ஆடுகிறாராம். ஆனால் நம்பவே முடியவில்லை. முதல் முறையாக ஆடுவதைப் போலவே இருக்கிறது. அவ்வளவு எனர்ஜி.

  நானும் டேவிட் தவன், கோவிந்தா இதற்கு முன்பு கியூன்கி மெய்ன் ஜூத் நஹி போல்தா படத்திலும் நடித்துள்ளோம். அந்தப் படத்திலும் இதேபோன்ற கதைதான். ஆனால் அந்தப் பெண்ணின் இயல்பு வேறு. டு நாட் டிஸ்டர்ப் படத்தின் நாயகி இந்தக் காலத்துப் பெண். எனவே இதில் காட்டப்படும் உணர்வுகள் வேறாக இருக்கும்.

  படத்தில் என்னை விட லாரா தத்தாவுக்கு நிறைய காட்சிகள் உள்ளன. நான் மனைவி ரோலில் நடிக்கிறேன். எனவே குறைச்சல்தான். மனைவியாக நடிப்பவர்களுக்கு அப்படித்தான்.

  படத்துக்காக நான் நிறைய வெயிட் போட்டுள்ளேன். தவன்தான் வெயிட் போடச் சொன்னார். மறு பேச்சு பேசாமல் சாப்பிட ஆரம்பித்து விட்டேன்.

  அதற்கு அவர் சொன்ன காரணம் இன்றைய திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்- இன்று திருமணமாகி விட்டால் தங்களது உடலைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் குடும்பம், கணவன், பிள்ளைகள் என்று கவலைப்பட ஆரம்பித்து விடுகிறார்கள் இந்தக்காலத்துப் பெண்கள். இதனால் உடம்பு குண்டாகி விடுகிறது. அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு அழகான வில்லி அவர்களது வாழ்க்கையில் நுழைந்து விடுகிறாள். இதுதான் டு நாட் டிஸ்டர்ப் படத்தின் கதையும் கூட என்று கூறி நிறுத்தினார் சுஷ்.

  சரி, லாரா தத்தாவுடன் சண்டை போட்டீர்களாமே என்று கேட்டால், அதெல்லாம் வதந்திங்க. அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. லாராவுடன் எனக்கு நெருங்கிய பழக்கம் கிடையாது. ஆனால் அவர் நல்ல நடிகை, அழகிய பெண். அவருடன் நடித்தது சந்தோஷமான அனுபவம். யார்தான் இப்படியெல்லாம் வதந்தி கிளப்புகிறார்களோ தெரியவில்லை. உண்மையில் நான் யாருடனும் சண்டை போடும் பழக்கம் கொண்டவள் இல்லை என்று சிரித்து - முடித்தார் சுஷ்மிதா.

  அதானே, சுஷ்மிதா ரொம்ப நல்ல புள்ளையாச்சே...!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X