twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பிரபுதேவா வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது' - தங்கர்பச்சான்

    By Shankar
    |

    Kalavadiya Pozhuthugal
    தனது வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை பிரபுதேவாவுக்கு இருக்கிறது. இப்போதைய சிக்கல்களைக் கடந்து வரும் பக்குவம் அவருக்கு உண்டு," என்றார் இயக்குநர் தங்கர் பச்சான்.

    களவாடிய பொழுதுகள் படத்தில் பிரபு தேவா ஹீரோவார நடித்துள்ளார். இந்தப் படத்தை தங்கர் பச்சான் எழுதி இயக்கியுள்ளார்.

    இந்தப் படம் வெளிவரவிருப்பதால், அதுகுறித்து நிருபர்களுக்கு தங்கர் பச்சான் பேட்டியளித்தார்.

    அந்தப் பேட்டி விவரம்:

    'களவாடிய பொழுதுகள்' உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையா?

    இதுவும் ஒரு காதல் கதைதான். இதற்கு முன் என் இயக்கத்தில், 'அழகி' படம் காதலின் ஒரு பரிமாணத்தை சொன்னது. 'களவாடிய பொழுதுகள்' இன்னொரு பரிமாணத்தை சொல்கிறது. ஒவ்வொரு ஆண்-பெண்ணின் மணவாழ்க்கைக்கு முன்பும் அவர்கள் வாழ்க்கையில் காதல் எட்டிப்பார்த்து இருக்கும்.

    வாழ்க்கையின் நெறிகளை மதித்து, மறைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பல நேரங்களில், சமுதாயத்துக்காக பொய் சொல்லி வாழ வேண்டியிருக்கிறது. தமிழ் மரபுகளை காப்பாற்றுகிற ஒவ்வொரு ஆண்-பெண்ணின் பெருமையை இந்த படம் பேசும். காதலித்தவர்கள், காதலிக்கிறவர்கள், காதலிக்கப் போகிறவர்கள் மத்தியில் கேள்வியை எழுப்புகிற படமாக இருக்கும்.

    இந்த கதைக்கு பிரபுதேவா எந்தவகையில் பொருத்தமாக இருந்தார்?

    பிரபுதேவா நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருந்தார். அவர் எந்த இடத்தில் நடித்து இருக்கிறார்? என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார்.

    நான், 1998-ம் வருடம் 'ஜேம்ஸ்பாண்டு' என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்தபோது, பிரபுதேவா எனக்கு அறிமுகம் ஆனார். கடந்த 13 வருடங்களாக நாங்கள் நண்பர்களாக பழகி வருகிறோம்.

    நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரிந்த முதல் படம், 'களவாடிய பொழுதுகள்.' இந்த படத்துக்காக அவரை ஒப்பந்தம் செய்தபோது, எங்கள் இருவருக்கும் இடையே சண்டை வந்து, படம் பாதியில் நின்று விடும் என்று சிலர் கேலி பேசினார்கள். ஆனால், படத்தில் நான் சொன்னதை எல்லாம் பிரபுதேவா செய்தார். அவருடைய நடிப்பில் நான் மெய்மறந்ததுதான் உண்மை. அவர் நடிப்பில், நான் திருத்தம் சொல்லவே இல்லை.

    படத்தின் குரல் பதிவு முடிந்ததும், பிரபுதேவா ஒரு மணி நேரம் தனியாக உட்கார்ந்திருந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. எனது கண்களும்தான்... வாழ்க்கையை உரசிப்பார்க்கிற உரையாடல்களும், சம்பவங்களும் ஒவ்வொருவரையும் பாதிப்பது இயல்புதானே...''

    பிரபுதேவாவுக்கு அவருடைய மனைவியுடன் விவாகரத்து, நயன்தாராவுடன் திருமணம் என்று அவருடைய சொந்த வாழ்க்கையில் சில சிக்கல்கள் உள்ளன. இதுபற்றி நீங்கள் அவரிடம் கருத்து சொல்வது உண்டா?

    ஒரு நண்பனாக கருத்துக்களை சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. அதனை அவர் விரும்பும்போதுதான் செய்ய முடியும். சிக்கலை கடந்து வரும் பக்குவம் அவருக்கு இருக்கிறது. கலைஞர்களுக்கு சிக்கல்கள் உருவாவது இயற்கையானதுதான். அவர் ஒரு பெருங்கலைஞன். அவருக்கான வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளும் உரிமை அவருக்கு இருக்கிறது," என்றார்.

    இதே தங்கர் பச்சான், கடந்த ஆண்டு பிரபு தேவாவின் நடிப்பு மற்றும் அவரது ஒத்துழைப்பு குறித்து மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் ஒரு தொழில்முறையற்ற சினிமாக்காரர் என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

    English summary
    Thankar Bachan told that actor - director Prabhu Deva has all the rights to decide his life and marriage. The director told this in a press meet arranged for his forthcoming directorial venture Kalavadiya Pozhuthugal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X