அமெரிக்கர்கள் இந்திய விருது வாங்கும் நிலை வரவேண்டும்- இது கமல் கனவு

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நான்கு நாட்கள் நடந்த விஐடி ரிவேரா-2010 நிகழ்தச்சியின் நிறைவு விழாவில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றார் கமல்ஹாஸன். நிகழ்ச்சியின்போது மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
எனது ரோல்மாடல்...
எனது ரோல்மாடல் ஈ.வெ.ராமசாமிதான். நான் படிக்காவிட்டாலும், என் வாழ்க்கை எப்போதும் திறந்த புத்தகமாகவே உள்ளது. யார் வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். எனது வாழ்க்கை ஒரு அற்புதமான பயணம். அதில் எந்த குருவும் குருதட்சணை கேட்கவில்லை.
நடிப்பதற்கு ஓய்வு...
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கனவை நனவாக்கி வருகிறேன். எனக்குப் பிறகு, நாளைய கலைஞனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அவர் கிடைத்துவிட்டால், நடிப்பதற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, படம் பார்க்கச் சென்று விடுவேன்.
ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயாரா?
ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கு நான் தயாரா என்பது இருக்கட்டும்... படம் எடுக்கத் தயாரிப்பாளர்கள் யார் தயாராக உள்ளனர்? இதனால்தான் உங்களின் (மாணவர்களின்) இந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் உள்ளது.
ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் எனது கனவு பற்றி கேட்கிறீர்கள். ஆனால், அமெரிக்கா சென்று விருது வாங்குவதைத் தவிர்த்து, அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு வந்து விருது வாங்கும் நிலை வர வேண்டும். இதுதான் எனது கனவு.
விஐடி பல்கலைக்கழகத்தில் நடிப்புக் கல்லூரி தொடங்கப்படுமா?
இந்தக் கேள்விக்கு பதில் இதுதான்... இங்கு திரைக்கதை வசனம் மட்டும் கற்றுத்தர ஏற்பாடு செய்வேன். காரணம், நானும் விஐடியின் ஒரு உறுப்பினர் என்றார் கமல்.


Click it and Unblock the Notifications











