twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ரீதேவியைக் காதலித்தேனா? - கமல் பேட்டி

    By Sudha
    |

    பல பேர் நானும் ஸ்ரீதேவியும் திருமணம் செய்து கொள்வோம் என்றே நினைத்திருந்தனர். ஸ்ரீதேவியின் அம்மா கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் எங்களுக்குள் இருந்தது ஒரு அற்புதமான உறவு என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

    மலையாளப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:

    ஒளி கொடுத்த சூரியன் சிவாஜி

    என்னுடைய இத்தனை வருட பயணத்தில் எனக்கு மிகப்பெரிய முன்னோடியாக, என்னை பாதித்தவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். ஒளி கொடுக்கும் ஒரு சூரியன் மாதிரி அவர் இருந்தார்.

    விருதுகள் பற்றி கவலைப்படும் நிலையில் நான் இல்லை. விருதுகளும் பாராட்டுக்களும் ஒரு கலைஞனை உற்சாகப்படுத்துபவை என்பதை நான் மறுக்கவில்லை. எனக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லையே என்று வருத்தமில்லை. அதே நேரம் ரஹ்மானுக்கு அந்த விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

    ஆஸ்கர் குறித்து கவலை இல்லை

    எஞ்ஜினீயரிங் படிப்பு படிக்காமலேயே எனக்கு பிஇ பட்டம் கிடைக்கவில்லையே என்று புலம்புவதைப் போலத்தான், எனக்கு விருது கிடைக்கவில்லையே என்று கூறுவது. ஒருவேளை நான் ஆஸ்கர் விருதுக்கேற்ற மாதிரி படங்கள் செய்திருந்தால், உரிய முறையில் அணுகியிருந்தால் எனக்கும் விருது கிடைத்திருக்கும். சத்யஜித் ரேக்கு வழங்கப்பட்டதைப் போல, நான் இறந்த பிறகு எனக்கும் கூட ஆஸ்கர் தரப்படலாம். அதை என் குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள்.

    நிறைய முறை என்னிடம் அரசியல் பற்றி பேசிவிட்டார்கள். மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் குதித்து பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்றில்லை.

    மலையாளம் சினிமா எனக்கு நிறைய கற்றுத் தந்தது. அந்த பாதிப்பில்தான் நான் மகாநதி போன்ற படங்களை எடுத்தேன். கிட்டத்தட்ட பாலச்சந்தர் எப்படி என்னை ஒரு வடிவத்துக்கு கொண்டுவந்தாரோ, அதே போன்ற பணியை மலையாளம் சினிமா செய்தது.

    நானும், ரஜினியும்

    எனக்கும் ரஜினிக்கும் உள்ள உறவு மிகவும் நட்பு ரீதியானது. அதையும் தாண்டியது என்றுகூடச் சொல்லலாம். அப்போதெல்லாம் நான் சினிமா வாய்ப்புக்காக பாலச்சந்தர் போன்ற இயக்குநர்களின் அலுவலகத்திலேயே அமர்ந்திருப்பேன். அப்படி ஒரு நாள் பாலச்சந்தர் அலுவலகத்துக்குப் போய் அமர்ந்திருந்தேன்.

    அப்போது, 'வெளியில் ஒரு பிலிம் இன்ஸ்ட்டிட்யூட் மாணவர் நிற்கிறார். மராட்டி பெயர். ஆங்கிலம், கன்னடம் பேசுவார். கராத்தே தெரியும். நீ போய் அவரை வரச் சொல்' என்றார். நானும் போய் அழைத்து வந்தேன். அவர்தான் ரஜினிகாந்த். நானும் அவரும் இணைந்துதான் அந்தப் படத்தைச் செய்தோம்.

    அந்த படத்தில் ரஜினி பிரெஞ்ச் தாடி வைத்திருப்பார். அப்போது எனக்கு ராஜன் என்று ஒரு மிக நெருங்கிய நண்பர் இருந்தார். கேன்சர் நோயாளி. அவரும் பிரெஞ்ச் தாடிதான் வைத்திருப்பார். படம் முடிந்த பிறகு ராஜன் இறந்து போனார். உடனே ரஜினியும் தன் தாடியை எடுத்துவிட்டார். அன்று முதல் ரஜினி என் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல... ராஜன் இடத்தில் நான் வைத்துப் பார்க்கும் நபரும் அவரே. நட்பைத் தாண்டிய உணர்வு அது.

    வெற்றி தோல்விகளை நான் சகஜமாகவே எடுத்துக் கொள்கிறேன். பாட்ஷாவின் வெற்றியையும் குசேலன் தோல்வியையும் ரஜினி எப்படி எடுத்துக் கொண்டாரோ அப்படித்தான் நானும்.

    நானும் ஸ்ரீதேவியும்...

    என்னுடன் அதிகப் படங்களில், 27 படங்களில், நடித்தவர் ஸ்ரீதேவி. அது ஒரு இனிமையான நினைவு. நானும் அவரும் காதலிப்பதாக ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்றே எல்லாரும் நம்பினார்கள். ஸ்ரீதேவியின் தாயார் கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை. அதையெல்லாம் தாண்டிய அற்புதமான உறவு எங்களுக்குள் இருந்தது.

    அப்போதெல்லாம் என்னைப் பார்த்தால் ஸ்ரீதேவி பயத்துடன் ஒதுங்கி நிற்பார். அந்த பயம் இப்போதும் அவரிடம் உள்ளது. என்னை இப்போதும் கமல் சார் என்றுதான் அவர் அழைப்பார்...", என்று கூறியுள்ளார் கமல்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X