twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிதான் எனக்கு குரு! - சுமன்

    |

    Suman with Rajini
    'தமிழில் எனக்கு மீண்டும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கக் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்,' என்கிறார் நடிகர் சுமன்.

    தீ படத்தில் ரஜினியுடன் இரண்டாவது கதாநாயகனாக நடித்தவர் சுமன். அதன் பிறகு பல படங்களில் வில்லன், நாயகன் என பெரிய ரவுண்ட் வந்து, ஆட்டோ சங்கர் விவகாரத்தில் அடிபட்டு மீண்டும் நடிக்க வந்தார்.

    தெலுங்குப் படவுலகிலேயே இருந்தவரை, மீண்டும் சென்னைக்கு வரவைத்தவர் ரஜினிதான். அதுபற்றி சுமன் கூறுகையில், "நான் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பேன், இந்த அளவு பரபரப்பாக பேசப்படுவேன் என்று நினைக்கவே இல்லை.

    இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். என் பெயரை இயக்குநர் ஷங்கரிடம் சிபாரிசு செய்துவிட்டு எனக்கு போன் செய்தார் ரஜினி. 'சுமன்... சிவாஜி படத்தில் ஒரு வில்லன் ரோல் இருக்கு... பவர்புல் ரோல்... கட்டாயம் நீங்க பண்ணுங்க. மீண்டும் தமிழ்ல பெரிய ரவுண்ட் வருவீங்க' என்றார்.

    நான் உடனே ஒப்புக்கொண்டேன்.

    கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் நான் ரஜினியுடனே இருந்தேன். அந்த காலகட்டத்தில் ஒரு நவீன குரு மாதிரி இருந்து எனக்கு பல நல்ல விஷயங்களை கற்றுத் தந்தார் ரஜினி. இதைச் சொல்ல நான் கூச்சப்படவில்லை. என் வாழ்க்கை முறையே அவரால் நல்ல விதமாக மாறிப்போனது. அந்த மாற்றம்தான் எனக்கு ஏராளமான வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது.

    வாழ்க்கை என்றால் என்ன... தொழிலை எப்படி சிரத்தையுடன் செய்ய வேண்டும்... பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும், குடும்பம் - தொழில் இரண்டையும் சரியாக மேனேஜ் செய்வது எப்படி... இவையெல்லாவற்றுக்கும் மேல் நல்ல மனிதனாக இருப்பது எப்படி? என்றெல்லாம் எனக்கு நிறைய கற்றுத் தந்தார் ரஜினி. குறிப்பாக சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவது பற்றி எனக்கு நிறையவே சொன்னார். சொன்னதோடு மட்டுமல்ல... அதற்கு தன்னையே உதாரணமாக நடைமுறையில் காட்டி அசர வைத்தார். படப்பிடிப்புக்கு 10 நிமிடம் முன்பாகவே வருவார், மேக்கப்புடன். இன்று நான் எந்தப் படப்பிடிப்புக்கும் தாமதமாகச் செல்வதே இல்லை.

    என்னை முடிந்தவரை முழுமையாக மாற்றிக் கொண்டேன். இந்த மாற்றத்தை ஒரு சகோதரனாக, குருவாக இருந்து எனக்குக் கற்றுத் தந்தவர் ரஜினிதான்.

    எனக்கு சிவாஜி படத்துக்கு சிறந்த வில்லன் விருது கிடைத்ததைக் கூட ரஜினிதான் தொலைபேசியில் கூறி வாழ்த்தினார்.

    என்னைப் பொறுத்தவரை அந்த விருதை நான் ரஜினிக்கே சமர்ப்பிக்கிறேன். இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன்..." என்றார்.

    தயாரிப்பு, ஹீரோ, இந்தி வாய்ப்புகள் என பிரகாஷ்ராஜ் விட்ட இடைவெளியை இப்போது நிரப்பிக் கொண்டிருப்பவர் சுமன்தான். பெரிய படங்கள் பலவற்றில் இப்போது எதிர்நாயகன் இவரே!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X