எனது கணவரை விவாகரத்து செய்யவில்லை-பூமிகா தகவல்

By Sudha

Bhumika
நானும், எனது கணவர் பரத் தாக்கூரும் விவாகரத்து செய்யப் போவதாக வெளியாகியுள்ள தகவல் தவறு. அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பூமிகா சாவ்லா.

நடிகை பூமிகா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்தவர். பின்னர் அவர் யோகாசன பயிற்சியாளரான பரத் தாக்கூரை மணந்து கொண்டு செட்டிலானார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை தற்போது பூமிகா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒரு நிகழ்ச்சியில் பரத் இல்லாமல் போய் விட்டேன். உடனே கண், காது, மூக்கு வைத்து பேச ஆரம்பித்து விட்டனர்.

நான் மும்பைக்கும், துபாய்க்கும், ஹைதராபாத்துக்குமாக அலைந்து கொண்டிருக்கிறேன். நான் போகும் இடத்திற்கெல்லாம் என்னால் பரத்தை கூட்டிக் கொண்டு போய்க் கொண்டிருக்க முடியுமா அல்லது அவர்தான் எப்போதும் என்னுடனேயே இருக்க முடியுமா.

முதலில் எனது கணவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு என்றார்கள். பிறகு எனது பணத்தை அபேஸ் செய்து விட்டதாக கூறினார்கள். இப்போது என்னை அவர் அடித்து உதைப்பதாகவும் செய்தி வெளியிடுகிறார்கள்.

இப்போதுதான் நான் துபாயிலிருந்து திரும்பியிருக்கிறேன். மும்பையில் எனது தாயாருடன் தங்கியிருக்கிறேன். அவருக்கு உடல் நலம் சரியில்லை. அதனால்தான் அவருடன் தங்கியிருக்கிறேன்.

எனது கணவருக்கு எதிராக நான் பீகார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். எந்த காவல் நிலையம் என்பதையும் அவர்களே சொன்னால் நன்றாக இருக்கும் என்றார் பூமிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X