»   »  பொருத்தமானவருக்காக காத்திருக்கிறேன்! - ஸ்ரேயா

பொருத்தமானவருக்காக காத்திருக்கிறேன்! - ஸ்ரேயா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Shriya
சென்னை: திருமண பந்தத்தை பெரிதும் மதிக்கிறேன். பொருத்தமானவர் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் சென்னை வந்த ஸ்ரேயா இதுகுறித்து அளித்த பேட்டி:

நான் இதுவரை திருமணம் பற்றி முடிவு செய்யவில்லை. எனக்கு தகுதியான வரை நான் கண்டு பிடிக்கும் போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். திருமண பந்தத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்திப் படங்களை நான் ஒதுக்கவில்லை. அங்கு திருப்பதியான நல்ல கேரக்டர்கள் அமைந்தால் நடிப்பேன். வலுவான கதையம்சம், உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறேன். சவாலான வேடங்களில் நடிக்க பிடிக்கும். தெலுங்கில் நடிக்கும் டான் சீனு அது போன்று சிறந்த கதையுடன் தயாராகியுள்ளது.

தினமும் தீவிர உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டு கோப்புடன் வைத்துள்ளேன். நீச்சல் பயிற்சி, தியானம் யோகா போன்றவற்றை தவறாமல் செய்கிறேன். ஆக்கப்பூர்வான சிந்தனைகளையும் வளர்த்துக்கொள்கிறேன்," என்றார்.

ஸ்ரேயா கைவசம் ஒரு தமிழ்ப்படம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil