Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
'எல்லாம் விதி..!' - தத்துவம் பேசும் பிரபுதேவா

மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்யும் பிரபுதேவா, நடிகை நயன்தாராவை திருமணம் செய்கிறார்.
இதுகுறித்து பிரபுதேவா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "என் சொந்த வாழ்க்கையில் நடந்தவை எல்லாமே விதிப்படிதான் நடந்துள்ளன என்று நான் நம்புகிறேன். பள்ளியில் படித்த போது எனக்கு நன்றாக படிப்பு வரவில்லை. அதனால் டான்ஸ்மாஸ்டர் ஆனேன். பிறகு நடிகரானேன். இப்போது இயக்குனராகி இருக்கிறேன்.
என் சொந்த வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் தீர்மானித்திருப்பது விதிதான். எனவே விதிப்படி எனக்கு இதுதான் நடக்கும் என்று எழுதி இருந்தால் அது நடந்தே தீரும்.
இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். வாழ்க்கை நன்றாக போகிறது. என்னை சுற்றி உள்ள மக்களை மகிழ்ச்சி படுத்துவதே என் விருப்பம். வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறேன்.
நயன்தாரா விஷயத்தில், தற்போதைய சூழலில் நான் எந்த பரபரப்பு செய்தியையும் உருவாக்க விரும்பவில்லை. வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே நேரம், இடம் என்று உள்ளது. சரியான நேரம் வரும்போது எல்லாம் நடக்கும்...", என்றார்.
'காதலர் தினம் வருகிறதே, அன்றைக்கு உங்கள் ப்ளான் என்ன?' என்று கேட்டபோது, 'மும்பையில் இந்திப் படத்தின் க்ளைமாக்ஸ் பற்றி டிஸ்கஸ் செய்துகொண்டிருப்பேன்!', என்றார்.