twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மும்பை குண்டுவெடிப்பு: விருது நிகழ்ச்சியை நிறுத்திய ஐஸ்வர்யா

    By Siva
    |

    Aishwarya Rai
    டெல்லி: மும்பை தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

    நேற்று மாலை மும்பையின் முக்கியப் பகுதிகளில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களால் பாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது. தாயாகப்போகும் ஐஸ்வர்யா ராயும் பேரதிர்ச்சி அடைந்துள்ளார். ஐஸ்வர்யா கணவர் அபிஷேக்குடன் நேற்று டெல்லிக்கு சென்றிருந்தார்.

    அங்கு ஐஸ்வர்யாவுக்கு பிரெஞ்சு அரசு நேற்று விருது வழங்குவதாக இருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டவுடன் இந்த நிகழ்ச்சியை தள்ளிவைக்குமாறு ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டார்.

    இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது,

    மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்தோம். இந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அவர்கள் குடும்பத்தினருக்காவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இந்த நேரத்தில் இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நம்மை யாரும் அசைத்துவிட முடியாது என்று தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    நான் விருது வாங்குவதற்காக டெல்லிக்கு வந்தேன். ஆனால் அதற்கு இது சரியான நேரம் அல்ல. இந்த விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரெஞ்சு தூதரை கேட்டுக் கொள்வது தான் சரி என்று நானும், என் குடும்பத்தாரும் நினைத்தோம் என்றார்.

    இந்த விழாவில் கலந்து கொள்ள அமிதாப்பும் டெல்லிக்குச் சென்றிருந்தார். ஆனால் மும்பை சம்பவம் பற்றி கேட்டதும் அவர் விழாவிற்கு செல்லவில்லை.

    அமிதாப்பின் டுவீட்:

    மும்பையில் வெடிகுண்டு தாக்குதல்கள்...!!கடவுளே! மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்! என்று டுவிட்டரில் எழுதியிருந்தார்.

    மற்ற நடிகர்-நடிகைகள் மற்றும் திரைத்துறையினரும் தங்கள் அனுதாபத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தனர்.

    தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வருந்துகிறேன். கோழைத்தனமான தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது என்று இயக்குனர் மாதுர் பந்தர்கர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

    நடிகர் ஷஹீத் கபூரின் டுவீட்:

    மும்பையில் 3 வெடிகுண்டு தாக்குதல்கள்... தயவு செய்து வீடுகளுக்கச் செல்லுங்கள்!!!

    பிரியங்கா சோப்ரா டுவீட்:

    தயவு செய்து யாரும் வதந்திகள் மற்றும் உறுதிபடுத்தாத செய்திகளைப் பரப்பி மக்களை பீதியடையச் செய்ய வேண்டாம்.

    ரித்தேஷ் தேஷ்முக் டூவீட்:

    தாக்குதல்கள் பற்றி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதி்ல பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பத்திரமாக வீட்டில் இருங்கள்.

    சோனம் கபூர் டுவீட்:

    மும்பையில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நம்புகிறோம். வீட்டில் இருங்கள், பத்திரமாக இருங்கள்.

    அனுபம் கேர் கூறியதாவது,

    மும்பை தாக்குதல்கள்: கோபம், ஏமாற்றம் மற்றும் உதவியின்மை பதில் அல்ல. அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

    English summary
    Bollywood seems shaken by the triple blasts in Mumbai last evening. Aishwarya Rai who is in Delhi to attend an award function expressed her shock over the blasts. She said that they are praying for the victims and their families.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X