twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிக்க வந்திருந்தால் என்னை ஓரமா உட்கார வச்சிருப்பாங்க! - எல் ஆர் ஈஸ்வரி

    By Shankar
    |

    L R Eswari
    திரையுலகில் ஒரு பாடகியாக இருந்ததால் இன்று வரை மரியாதையுடன் இருக்கிறேன். நடிக்க வந்திருந்தால், வயசாயிடுச்சின்னு ஓரமா உட்கார வச்சிருப்பாங்க," என்றார் பின்னணிப் பாடகி எல் ஆர் ஈஸ்வரி.

    1958-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பின்னணி பாடகி, எல்.ஆர்.ஈஸ்வரி. 50 வருடங்களை தாண்டி திரையுலகில் இருந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

    அவருக்கு வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6-30 மணிக்கு, சென்னை காமராஜர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது.

    இதையொட்டி எல்.ஆர்.ஈஸ்வரி, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவர் கூறுகையில், "1958-ம் வருடம், 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்துக்காக, இவரேதான் அவரு...அவரேதான் இவரு'' என்ற பாடலை முதன்முதலாக பாடினேன். சிவாஜிகணேசன்-சாவித்ரி நடித்த 'பாசமலர்' படத்தில் நான் பாடிய வாராயோ தோழி வாராயோ'' என்ற பாடல்தான் என்னை பிரபலமாக்கியது.

    அந்த காலத்தில் எனக்கும் சக பாடகியான பி சுசீலாவுக்கும் போட்டி இருந்தது உண்மைதான். ஆனால், எங்களுக்குள் பொறாமை இருந்ததில்லை.

    எனக்கு எல்லா இசையமைப்பாளர்களையும் பிடிக்கும். குறிப்பாக, கே.வி.மகாதேவனை ரொம்ப பிடிக்கும். இப்போது பாட வரும் புதிய பாடகிகள், அவர்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள்.

    இப்போது வரும் பாடல்களில், பாடல் வரிகளை விட வாத்திய கருவிகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மைதான். எதுவோ தேய்ந்து எதுவோ ஆகிவிட்ட கதை போல் ஆகிவிட்டது.

    'சிவந்த மண்' படத்தில் இடம்பெற்ற பட்டத்து ராணி பாடலை கேட்டுவிட்டு, நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்னை பாராட்டியது இன்றும் பசுமையாக என் மனதில் உள்ளது.

    பாடும்போது, உணர்ச்சிகரமாக நான் ஆடிப்பாடுவதைப் பார்த்து படத்தில் நடித்திருக்கலாமே என கேட்கிறார்கள். நான் ஏன் நடிக்கணும்? நடிகையாக இருந்திருந்தால், வயசாகிடுச்சி என்று ஓரமாக உட்கார வச்சிருப்பாங்க. நல்ல வேளை அந்த தப்பை நான் பண்ணலை," என்றார்.

    English summary
    Veteran playback singer L R Eswari who is celebrating her golden jubilee on september 25 told that she never worried for not becoming an actor and proud to be a singer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X