twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்வர்யாவுக்கு சிசேரியன் நடக்கவில்லை... சுகப்பிரசவம்தான் - அமிதாப்

    By Shankar
    |

    ஐஸ்வர்யாராய்க்கு ஆபரேஷன் நடக்கவில்லை சுகப்பிரசவம்தான் நடந்தது என்று அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

    உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய்க்கு கடந்த புதன்கிழமை மும்பை ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஆபரேஷன் வேண்டாம் என மறுத்து சுகப்பிரசவமாக குழந்தையை பெற்றுக்கொண்டார். அவரது இந்த நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர்.

    இரண்டு நாட்களில் ஐஸ்வர்யாராயும் குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.

    இதுகுறித்து அமிதாப் தனது ப்ளாகில், "சிசேரியன் நடந்ததாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தவறானது. ஐஸ்வர்யா ராய்க்கு ஆபரேஷன் நடைபெறவில்லை. வலி நிவாரணி மருந்து ஊசி எதுவும் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் உதவி இல்லாமலும் சுகப் பிரசவத்தில்தான் குழந்தை பிறந்தது.

    ஐஸ்வர்யா ராய் விருப்பப்படியே பிரசவம் நடந்தது. அவரது இந்த மன உறுதியை பிரசவம் பார்த்த மருத்துவர்களே பாராட்டியுள்ளனர்," என்று எழுதியுள்ளார்.

    மேலும் குழந்தையுடன் அதிக நேரம் இருக்க தான் ஆசைப்பட்டாலும், அவள் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறாள் என்றும் தாத்தா அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.

    ஐஸ்வர்யா ராய் வீடு திரும்பியதும் குழந்தைக்கு பிரமாண்ட முறையில் பெயர் சூட்டு விழா நடக்கிறது.

    இதற்கிடையே, குழந்தையைப் பார்க்க அமர்சிங் போன்ற அமிதாப்பின் குடும்ப நண்பர்கள், திரையுலகப் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    English summary
    Aishwarya has shown immense courage during her pregnancy and had reportedly told the doctors that she would wait for a normal delivery rather than a C-section and as per her wishes it was a normal delivery. Her father in law Amithab has mentioned this in his blog yesterday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X