For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆதிராவை 'பதம்' பார்த்த ரித்திக்!

  By Staff
  |

  Ratheesh Kumar with Aadhira
  பொதுவாக தமிழ் சினிமாவில் நிறைய ஹீரோக்கள் இருப்பது போலத் தெரியும். ஆனால் அவசரமாக ஒரு படம் தயாரிக்க வேண்டும், எந்த ஹீரோ கிடைப்பார் என்று தேடினால் ஒருவரும் கிடைக்க மாட்டார்கள்.

  "அவர் அடுத்த இரண்டாண்டுகள் வரை பிஸி, இவர் தெலுங்கில் பிஸி, இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு கிட்டேயே வராதீர்கள்..."

  -கொஞ்சம் பிரபலமாக இருக்கிற ஹீரோக்களைத் தேடிப்போனாலும் தயாரிப்பாளர்களுக்கு இப்படித்தான் பதில் கிடைக்கும். வேறு வழியில்லாமல் அடுத்த கட்ட முயற்சியில் இறங்குவார்கள். அதுதான் ஒரு நாயகனை புத்தம் புதிதாக உருவாக்குவது.

  அப்படி உருவாகியுள்ள புதிய கதாநாயகன் ரித்திக். ஆக்ஷன், ரொமான்ஸ் வேடங்களுக்கென்றே தயார் செய்யப்பட்ட மாதிரி அழகான உருவம். கல்லூரி மாணவிகளின் மனதைத் திருடும் துறுதுறுப்பு நிறைந்த இந்த இளைஞர், மாணவன் நினைத்தால் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே பாக்யராஜூடன் இணைந்து கலக்கியிருக்கிறாராம்.

  இவருக்கு இந்தப் படத்தில் நாயகி, வர்ஷினி என்ற ஆதிரா. முதல் படத்திலேயே கதாநாயகியின் உதடுகளை கடித்து சுவைத்துப் பார்க்கும் அரிய வாய்ப்பையும் இயக்குநர் இந்த புதுமுகத்துக்கு வழங்கியிருக்கிறார் ('கடைசில அந்த சீன்களையெல்லாம் தூக்கிட்டாங்க சார்!' என்கிறார் சற்றே சந்தோஷமான ஏமாற்றத்துடன்!).

  சரி... ரித்திக்கின் பின்னணி?

  "எனக்கு எந்த சினிமா பின்னணியும் இல்ல சார். பிறப்பால ஒரு மலையாளின்னாலும், முழுக்க முழுக்க நான் ஒரு சென்னைப் பையன். பிறந்தது, படிச்சது, வளர்ந்ததெல்லாம் சென்னைலதான். படிச்சிகிட்டிருந்தப்போ இந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. முதல் படத்துலயே பாக்யராஜ் என்ற ஜாம்பவானுடன் நடிக்கும் வாய்ப்பு. முதலில் நடுங்கிப் போனேன். ஆனால் அவர் ஒரு ப்ரெண்ட் மாதிரி ஜாலியா பழகி என்னையும் நடிக்க வெச்சார்...." என்கிறார் ரித்திக்.

  ஆதிராவுடன் நடித்த அனுபவம்...

  'அதப் பத்திச் சொல்ல என்ன இருக்கு...' என்று கூச்சத்துடன் ஆரம்பித்தவர், "ஆதிரா என்னைவிட அனுபவசாலி... இதற்குமுன் சில படங்களில் நடித்திருக்கிறார். அதனால் அவரளவு இயல்பாக இருக்க முடியவில்லை காதல் காட்சிகளில். இந்தப் படத்தில் நானும் அவரும் கிளாஸ்மேட்ஸ். உதட்டோடு உதடு பதிக்கிற சில காட்சிகள் இருந்தன. ஆனால் பின்னால் அவற்றை நீக்கிவிட்டார் இயக்குநர். மற்றபடி, ஆதிராவுடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம்தான்..." என்கிறார்.

  முதல் படம் வருவதற்கு முன்பே, ரித்திக்கின் கைகளில் மேலும் இரண்டு புதுப்படங்கள். ஒன்று காதல் ஓசை, இன்னொன்று வீரன் மாறன்.

  'இரண்டிலுமே பெயர் சொல்லும் வேடங்கள்... நம்பிக்கையோடு மாணவன் ரிலீசுக்குக் காத்திருக்கிறேன்" என்கிறார் ரித்திக்.

  அடுத்த வருஷமே, கால்ஷீட் பிஸி என்பாரோ?!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X