twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு முறையாவது முஜ்ரா நடனம் ஆட வேண்டும் - ஷில்பா ஆசை

    By Sudha
    |

    Shilpa Shetty and Raj
    தேவதாசிகளின் நடனமான முஜ்ராவை ஒரு படத்திலாவது ஆட வேண்டும் என ஷில்பா ஷெட்டி விருப்பம் தெரிவித்துள்ளார்.

    முகலாயர் ஆட்சிக்காலத்தில் உருவான நடன முறைதான் முஜ்ரா. தேவதாசிகள் ஆடும் நடனம் இது. இந்த நடனம் ஆடுபவர்களுக்கு வட இந்தியாவி்ல் தவைஃப் என்று பெயர். இந்த நடனம் ஆடும் இடத்திற்கு கோதா என்று பெயர். காலப் போக்கில் தவைஃப்களுக்கு விபச்சாரிகள் என்றும், கோதா-வுக்கு விபச்சாரக் கூடங்கள் என்றும் பெயர் மாறிப் போய் விட்டது.

    இப்போது கல்யாண நிகழ்ச்சிகள், பேச்சலர் பார்ட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் முஜ்ரா நடனம் ஆடப்படுவது வட இந்தியாவில் வழக்கமாக உள்ளது.

    வட இந்தியாவில் பிரபலமான இந்த முஜ்ரா நடனத்தை ஆடுவதற்கு தான் ஆசையாக உள்ளதாக ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

    ஸ்டார் பல்ஸ்டிவியில் ஒளிபரப்பாகும் ஜாரா நச்கே திகா என்ற நடன நிகழ்ச்சியில் நடுவரா கலந்து கொண்டுள்ளார் ஷில்பா. அப்போது அவர் பேசுகையில், எனக்கு பல நடனங்கள் தெரியும் என்றாலும் முஜ்ரா மீது எனக்கு தனி மோகம் உள்ளது. வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு படத்திலாவது முஜ்ரா ஆடி விட வேண்டும் என்பதை லட்சியமாக வைத்துள்ளேன். இதுவரை நான் முஜ்ரா ஆடியதே இல்லை. அதற்கான வாய்ப்பு எனக்கு அமையவில்லை என்றார் ஷில்பா.

    இந்தித் திரையுலகின் முடி சூடா ராணிகளான மதுபாலா, ரேகா, ஹேமமாலினி, மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முஜ்ரா நடனம் ஆடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேவதாஸ் படத்திற்காக மாதுரி தீட்சித் முஜ்ரா நடனம் ஆடினார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X