twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு பயமில்லை... சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! - அஜீத்

    By Shankar
    |

    எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. அதனால்தான், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்த போது பயமின்றி சுட்டிக் காட்டினேன், என்கிறார் அஜீத்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேட்டிகள் தர ஆரம்பித்துள்ளார் நடிகர் அஜீத் குமார்.

    சமீபதில் அவர் அளித்த ஒரு பேட்டியில் மங்காத்தா சிக்கலில் இருக்கிறது என்ற உண்மையை வெளியிட்டார்.

    இப்போது இன்னொரு பேட்டியில், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்தனர். அதை பயமின்றி சுட்டிக் காட்டினேன். காரணம் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

    கடந்த ஆட்சியில் நடந்த திரையுலக விழாயொன்றில், அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில், முதல்வர் விழாவுக்கு மிரட்டி அழைக்கிறார்கள், இது நியாயமா என்று கேட்டார். உடனே ரஜினி எழுந்து நின்று கைதட்டி ஆதரவைத் தெரிவித்தார்.

    இதற்கு பிறகு, அப்படி பேசியதற்காக முதல்வரிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார் என்பது வேறுவிஷயம்.

    ஆனால் அவரது இந்த பேச்சுக்காக சினிமா உலகைச் சேர்ந்தவர்களே அஜீத்தை தாறுமாறாக விமர்சித்தனர். இதனால் அவர் அதிமுக பக்கம் சாய்ந்தார். ஜெயலலிதாவைவும் சந்தித்தார்.

    இப்போது ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், ஆளும் கட்சி ஆதரவாளரான அஜீத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.

    இந்த நிலையில்தான் அஜீத்தின் பேட்டி வெளியாகியுள்ளது.

    அதில் அஜீத் கூறியிருப்பதாவது:

    நம்முடைய அரசியல் முறை மற்றும் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. சினிமாவில் இருக்கும் சிலரின் செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அதனால் அப்போது சில கருத்துக்களை வெளியிட்டேன்.

    என்னை எதிர்க்கும் அந்த சில நபர்கள் திரையுலகில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தவோ அல்லது எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதற்காகவோ இது போன்ற ஸ்டண்ட்களில் இறங்குகின்றனர். என் பெயரை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

    சினிமாவில் அரசியல் வேண்டாம்

    நான் வெளியாட்களைப் பற்றி பேசவில்லை. சினிமாவில் இருக்கும் சிலர் செய்கின்ற காரியங்களைத்தான் சுட்டிக் காட்டினேன். சினிமாவில் அரசியலை கலக்கக்கூடாது. எனது கருத்தை ஆதரித்தால் பாதிக்கப்படுவோம் என அப்போது பயந்தனர். அதனால் பேசாமல் இருந்தார்கள்.

    நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. இனம், மொழியை கடந்து அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்களாக இருக்கிறார்கள். சினிமா மூலம் மக்களை சந்தோஷப்படுத்துவதே நடிகர்கள் இலக்காக இருக்க வேண்டும்.

    மற்ற நடிகர்கள் போல் நான் அதிக படங்களில் நடிக்காத காரணம் என் வாழ்க்கையை நான் சந்தோஷமாக வாழ விரும்புகிறேன்."

    English summary
    Actor Ajith says that he hasn't any fear to oppose the bad things or persons in Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X