twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை

    By Shankar
    |

    இளகிய மனசு, தாராள குணம் கொண்டவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன், என்று தன் மனம் திறந்துள்ளார் நடிகை தமன்னா.

    தமிழில் படங்களை ஒப்புக் கொள்வதைத் தவிர்த்து வரும் தமன்னா, இப்போது தெலுங்கில் படுபிஸியாக உள்ளார்.

    சமீபத்தில் ஹைதராபாதில் நிருபர்களைச் சந்தித்தார் (சென்னையில் மட்டும் பிரஸ்மீட்டுக்கு ஸ்ட்ரிக்டாக நோ சொல்லிவிடுகிறாராம்!). அப்போது அவர் கூறுகையில், "இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டமெல்லாம் இல்லை. நான் சின்னப் பொண்ணு. 21 வயசுதான் ஆகிறது.

    ஆனால் எனக்கு கணவராக வருபவர் எப்படி இருக்கணும் என்று ஒரு கனவு இருக்கிறது. அவர் இளகிய மனம் படைத்தவராக இருக்க வேண்டும். தாராள குணம் கொண்டவராக இருக்கணும். என் ஆசைகளை, விருப்பங்களைப் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும்.

    நான் சினிமாவுக்கு வந்த புதிதில் அப்பாவியாக இருந்தேன். இப்போது நிறைய படங்களில் நடித்து முடித்து சந்தோஷமாக இருக்கிறேன்.

    எனக்கு கசப்பான அனுபவங்கள் உண்டு. ஏண்டா சினிமாவுக்கு வந்தோம் திரையுலகை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு விரக்தியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், கடினமாக உழைத்தால் எதையும் பெற முடியும்.

    நடிகையான பிறகு இயக்குனர் சொல்வதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒவ்வொரு படத்தையும் புதிதாக செய்வது போல் உணர்கிறேன்.

    கார்த்தியுடன் என்னை இணைத்து நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. எங்களுக்குள் காதல் இல்லை. நட்பாகத்தான் பழகுகிறோம்.

    எனக்கு இரவு நேரப் பார்ட்டிகள் அறவே பிடிக்காது. தமிழில் இயக்குனர்கள் கவுதம், ராதாமோகன், சசிகுமார் படங்களில் நடிக்க ஆசை.

    நவீன உடைகளைவிட, புடவைதான் எனக்குப் பிடித்த உடை. இந்தியப் பெண்களுக்கு அதுதான் அழகு", என்றார் தமன்னா.

    English summary
    In her recent interview Tamanna expressed her wishes and expectations on her marriage. The actress told that she would like to marry an man with maximum generosity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X