கேம் சேஞ்சர், தக் லைஃப் படுதோல்வி.. பயத்தை தருகிறதா? ஏ.ஆர்.முருதாஸின் தரமான பதில்!
சென்னை: தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ், ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் என வெற்றிப்படத்தை கொடுத்து தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கிறார்.இயக்கிய 'கஜினி' படம் ஹிந்தித் திரையுலகத்தில் 100 கோடியை வசூலித்தது. அதன்பின் அவர் இயக்கிய 'ஹாலிடே' படம் சுமாரான வெற்றிப் படமாகவும், 'அகிரா' தோல்விப் படமாகவும் அமைந்தது. தெலுங்கில் அவர் இயக்கிய 'ஸ்டாலின்' வெற்றிப் படமாகவும், மகேஷ் பாபுவை வைத்து இவர் இயக்கிய 'ஸ்பைடர்' தோல்விப் படமாகவும் அமைந்தது.
தோல்வி, வெற்றி என மாறி படத்தை கொடுத்து வந்த ஏ,ஆர்.முருகதாஸ் கடைசியாக சல்மான் கானை வைத்து இயக்கிய சிக்கந்தர் படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில், மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்னும் சில தினங்களில் படம் வெளியாக இருக்கும் நிலையில், மதராஸி படத்தின் இசை வெளியிட்டு விழா ஆகஸ்ட் 24ம் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ்: மதராஸி படம் குறித்து ஊடகத்திற்கு பேட்டி அளித்த ஏஆர்.முருகதாஸ், படம் குறித்து பல விஷயத்தை பேசினார். அதில், 'மதராஸி' படத்தின் கதை களம் காதலை மையப்படுத்தி நடக்கும் பெரிய ஆக்ஷன் கதையாகும். 'கஜினி' திரைப்படம் போலவே இதுவும் ஒரு பழிவாங்கும் கதைதான். ஆனால், இதில் காதல் தான் மையப்புள்ளியாக இருக்கும் என்றார். இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக இந்தியில் பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால், அவர்கள் நடிக்க மறுத்துவிட்டார்கள். நடிகர் வித்யூத் ஜாம்வாலிடம் 'மதராஸி' படத்துக்காக அணுகியபோது, கதை என்னவென்று கூட என்னிடம் கேட்கவில்லை, நான் கேட்டதுமே நடிக்கிறேன் என்றார். மதராஸி படத்தில் அவருடைய கதாபாத்திரம் மட்டுமன்றி பிஜு மேனன் மற்றும் ஷபீர் ஆகியோரது கதாபாத்திரமும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நடிகர் வித்யுத் ஜம்வால் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் எனக்காக நடித்துள்ளார் என்றார்.
பயத்தை தருகிறதா: மதராஸி படம் குறித்து, பல விஷயங்கள் பேசிய ஏ.ஆர் முருகதாஸிடம் செய்தியாளர், சங்கரின் இந்தியன் 2 கேம் சேஞ்சர் மற்றும் மணிரத்தினத்தின் தக் லைஃப் படங்கள் தோல்வி அடைந்தது குறித்தும், இப்படி தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் படங்கள் தோல்வியடைவதால் உங்களுக்கு பதற்றம், பயம் ஏற்படுகிறதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஏ.ஆர். முருகதாஸ், இயக்குனர்கள் சங்கர், மணிரத்திம் இருவருமே மிகச்சிறந்த இயக்குனர்கள். இவர்களின் படங்கள் வெறும் கமர்ஷியலை தாண்டி சமூக ரீதியான சிந்தனைகளை தூண்டும் திரைப்படங்களாக இருக்கும். இவர்கள் சறுக்களை சந்திப்பதற்கு காரணம் அவர்கள் தான் சாலை போடக்கூடிய ஆட்கள். அதனால் அதில் ஏற்றமும் இறக்கத்தையும் சந்திக்கின்றனர். ஒருவர் சரியாக சென்று கொண்டிருந்தால், யாரோ போட்ட சாலையில சென்று கொண்டிருக்கிறார்கள் என்றாகி விடும், ஆனால் மணிரத்தினமும் சங்கரும் புதிதாக முயற்சி துணிந்து கையில் எடுக்கக்கூடியவர்கள். அவர்களை எவ்வளவு எளிதாக புறக்கணிக்க முடியாது, இருவருடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கிறது என ஏ.ஆர். முருகதாஸ் அந்த பேட்டியில் சரியான பதில் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











