குட்டி டிராகனுக்கு பிடித்த 10 காமெடி படங்கள்.. ’ஆரோமலே’ ஹஷ்ரத் கான் சாய்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கே!

சென்னை: விஜே சித்துவுடன் காமெடி வீடியோக்களை செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த ஹஷ்ரத் கான் இந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டிராகன் படத்தில் குட்டி டிராகனாக நடித்து "மாட்டிக்கினாரு" பாடலில் மாஸ் காட்டியிருப்பார்.

அடுத்ததாக ஆரோமலே, டயங்கரம் என படு பிசியாக மாறியுள்ள அஸ்ரத் கான் விரைவில் வெளியாகவுள்ள ஆரோமலே படத்தின் புரமோஷனுக்காக யூடியூபர் இர்ஃபானிடம் நடத்திய பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த டாப் 10 காமெடி படங்களை பட்டியலிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Aaromaley Actor Dragon fame Hashrath Khan listed his top 10 Comedy Movies at Irfan show

மோகன்லால், பிருத்விராஜ் இந்த ஆண்டு வெளியான எம்புரான் படத்துக்காக யூடியூபர் இர்பான் உடன் கொடுத்த பேட்டியில் பிரபலங்களை வைத்து சரியாக பேட்டி எடுக்க முடியவில்லை என இர்பானுக்கு எதிராக ட்ரோல்கள் குவிந்த நிலையில், சில மாதங்கள் புதிய பேட்டிகளை ஆரம்பிக்காமல் இருந்த இர்ஃபான் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

ஹஷ்ரத் கான் நடித்த ஆரோமலே: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் நடித்த டிராகன் படத்தில் குட்டி டிராகனாக மாஸ் காட்டிய ஹஷ்ரத் கான் அடுத்ததாக 'முதல் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் பிரபலமான கிஷன் தாஸ் உடன் இணைந்து நடித்துள்ள ஆரோமலே திரைப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. அதில், காமெடியில் பட்டையை கிளப்பியுள்ள ஹஷ்ரத் கான் தனக்கு பிடித்த டாப் 10 காமெடி படங்கள் குறித்து இர்பான் உடன் விளையாடிய கேமில் கூறியுள்ளார்.

ஹஷ்ரத் கானுக்கு பிடித்த டாப் 10 காமெடி படங்கள்: தமிழ் சினிமாவில் வந்த காமெடி படங்களை ரேட்டிங் செய்ய சொல்லி இர்பான் சொன்ன நிலையில், ஹஷ்ரத் கான் ரேட்டிங் செய்த டாப் 10 காமெடி படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம் வாங்க..

1. பஞ்ச தந்திரம்
2. கலகலப்பு
3. வின்னர்
4. பிரண்ட்ஸ்
5. எங்கள் அண்ணா
6. மிடில் கிளாஸ் மாதவன்
7. உள்ளத்தை அள்ளித்தா
8. பாஸ் என்கிற பாஸ்கரன்
9. தெனாலி
10. இங்கிலிஷ்காரன்

என தனக்குப் பிடித்த காமெடி படங்களை வரிசைப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் சமீப காலமாக இதுபோன்ற காமெடி படங்களுக்கு ரொம்பவே பஞ்சம் உள்ளது என்பதும் அவரது பேச்சில் இருந்தே தெரிகிறது. ஆரோமலே படத்தின் மூலம் ஹஷ்ரத் கான் எந்தளவுக்கு ரசிகர்களை சிரிக்க வைக்கிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X