கூட இருந்தே குழி பறிச்சாங்க.. ஆர்யா கூட நடிக்கவே மாட்டேன்.. அபர்ணதி பகீர் பேட்டி!
நடிகை அபரதி சினிமா துறையில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார். நெருங்கிய தோழி ஒரு பட வாய்ப்பை தட்டிப்பறிக்க முயற்சி செய்தது, ஆர்யாவுடனான 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி அனுபவம், 'ஜெயில்' பட இன்டிமேட் காட்சிகள், மற்றும் சினிமா துறையின் சொல்லப்படாத விதிகள் பற்றி அவர் பகிர்ந்துகொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: சினிமா துறையில் தனக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவத்தை அபர்ணதி பகிர்ந்துகொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெருங்கிய தோழியாக இருந்த நடிகையே, ஒரு பட வாய்ப்பை தட்டிப்பறிக்க முயற்சி செய்ததாக அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது சினிமா பயணம் குறித்து பேசிய அபர்ணதி, 2018ஆம் ஆண்டு மீடியா துறைக்குள் நுழைந்ததாகவும், இந்த 6-7 ஆண்டுகளில் நிறைய போட்டிகளை சந்தித்ததாகவும் கூறினார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பது தனக்கு சவாலாகவும், அதே சமயம் உற்சாகம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரூமர்ஸ் பற்றி கேட்டதற்கு, தனக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாக எந்த தகவலும் வரவில்லை என்று அபர்ணதி கூறினார். ஆனால், அவரைப் பற்றி ஒரு ரூமர் சொல்ல வேண்டுமென்றால், அவருக்கு நிறைய பாய் பிரண்ட்ஸ் இருப்பதாக சொல்லலாம் என ஜாலியாக பதிலளித்தார்.
சினிமா துறையில் ஃபேக் பிரண்ட்ஷிப் குறித்து பேசிய அபர்ணதி, கேமராவுக்கு முன்னால் சகஜமாக பேசுவது போல இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு போவதாக கூறினார். தனக்கு நெருங்கிய நண்பர்கள் சினிமாவில் குறைவுதான் என்றும், அதனால் ஃபேக் நட்பு இருப்பதாக உணரவில்லை என்றும் அவர் கூறினார்.
நம்பிக்கை துரோகம் செய்த அந்த சினிமா தோழி பற்றி விவரித்த அபர்ணதி, "அவள் நடித்த படத்தின் பிரீமியர் ஷோவுக்கு நான் போயிருந்தேன். அடுத்த நாளே, அந்த படத்தின் இயக்குநர் என் போன் நம்பர் கேட்டதாகவும், ஆனால் என்னை அந்த கதாபாத்திரத்திற்கு வேண்டாம் என வேறொரு நடிகையை அவர் பரிந்துரைத்ததாகவும் எனக்கு தெரிய வந்தது" என்றார்.
casting couch பற்றி பேசிய அபர்ணதி, இதுவரை யாரும் தன்னை தவறான எண்ணத்தில் அணுகியதில்லை என்று திட்டவட்டமாக கூறினார். உடல் எடையை கூட்டவோ, குறைக்கவோ தான் வாய்ப்புகள் வந்ததாகவும், மற்றபடி எந்த கெட்ட எண்ணத்திலும் தன்னை அணுகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

"எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சி குறித்து பேசிய அபர்ணதி, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ஒரு நல்ல அனுபவம் என்றும், ஆர்யா திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் கூறினார். அந்த நிகழ்ச்சியில் நிறைய வாக்குவாதங்கள் நடந்ததாகவும், அதனால் தனக்கு மன வருத்தம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆர்யாவுடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, வேண்டவே வேண்டாம், ஆர்யா கூட நடிக்கவே மாட்டேன் என்று பதிலளித்தார் அபர்ணதி. "அந்த நிகழ்ச்சியில் நடந்தது ஒரு நல்ல நினைவாக இருக்கட்டும். அதை வைத்து நான் ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த நினைவை கெடுக்க விரும்பவில்லை" என்றார்.
ஜெயில் படத்தில் நடித்தபோது இன்டிமேட் காட்சிகளில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அபர்ணதி, அது மிகவும் ஜாலியாக இருந்தது என்றார். அது படப்பிடிப்பின் இரண்டாம் நாள் என்பதால், படக்குழுவினருடன் அதிகம் பழகவில்லை எனவும், அந்த காட்சியில் நடிக்க கொஞ்சம் தயக்கமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
சினிமா துறையில் சொல்லப்படாத விதி என்று எதை நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,"சினிமா துறையில் ஒப்பந்தம் போடுவார்கள். ஆனால், அதில் குறிப்பிட்ட சம்பளத்தை கொடுக்க மாட்டார்கள். அந்த ஒப்பந்தமே வேஸ்ட்" என்று வெளிப்படையாக கூறினார் அபர்ணதி.


Click it and Unblock the Notifications











