»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டியர் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் அபிராமிக்கு, தனது எதிர்காலம் குறித்து அபார நம்பிக்கைஏற்பட்டுள்ளதாம்.

சண்டியர் படத்தில் கமலுக்கு ஜோடியாக, அன்னலட்சுமி என்ற கேரக்டரில் நடிக்கிறார் அபிராமி.

இந்தப் படத்திற்காக தன்னைமேக்கப் டெஸ்ட்டுக்கு வரச் சொன்ன கமல்ஹாசன், பின்னர் அது பார்மாலிட்டிதான் என்றும் ஏற்கனவே உங்களை தேர்வு செய்துவிட்டோம் என்று கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்ததாக கூறுகிறார் அபிராமி.

சண்டியர் படத்தில் வரும் அன்னலட்சுமிக்கும், தேவர் மகனில் வரும் பஞ்சவர்ணத்திற்கும் (ரேவதி) ஏதாவது ஒற்றுமை உண்டா என்றுகேட்டால், கமல் சார்கிட்ட கேளுங்க. கதை பத்தி நான் வாய் திறக்க முடியாது என்று ஒதுங்கிக் கொள்கிறார்.

தேவர் மகனில் ரேவதி பேசப்பட்டது போல சண்டியரில் நானும் பேசப்படுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அபிராமி.

இதற்கிடையே பிரான்சில் நடிக்கும் கான்ஸ் சர்வதேச பட விழாவில் பங்கேற்கவும், கதையை ஷார்ப் செய்யவும் சண்டியர் படசூட்டிங்கையே தாற்கலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறாராம் கமல்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன்உள்ளிட்ட சிலருடனும் சண்டியர் கதை டிஸ்கசன் நடத்ததி திட்டமிட்டுள்ளார் கமல்.

கமலுக்கு சண்டியர் கேரக்டர் குறித்து அவுட்லைன் கொடுத்ததே சேதுராமன் தானாம்.

இதனிடையே கமலின் நளதமயந்தி மிக வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

கமல் இந்தப் படத்தில் அவ்வளவாகத்தலையிடுவதே இல்லையாம். ஆஸ்திரேலியத் தமிழர்கள் பலரும் இதில் நடித்துள்ளார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil